முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் சிறப்புப் பேருந்துகள் : ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் தமிழகத்தின் பிற இடங்களில் இருந்து, சிறப்புப் பேருந்து சேவை தொடங்கியுள்ளது. 13-ம் தேதி வரை, 3 நாட்களுக்கு 17,693 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் 5 இடங்களுக்குச் செல்ல, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 17,693 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

  பஸ் சேவை தொடங்கியது:

அதன்படி, சிறப்புப் பேருந்துகள் சேவை தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பிற ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன்,நேற்று முதல் 13-ம் தேதி வரை மொத்தம் 11,270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாநிலத்தின் பிற ஊர்களில் இருந்து,  நேற்று முதல் 13-ம் தேதி வரை 6,423 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் சென்னை அண்ணாநகர் மேற்கு, தாம்பரம் சானடோரியம், பூவிருந்தவல்லி, அடையாறு மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களுக்கு மக்கள் எளிதாகச் செல்ல மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், நேற்று முதல் 13-ம் தேதி வரை, மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், பொங்கல் பண்டிகை முடிந்து, மக்கள் திரும்ப ஏதுவாக, 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து, 3,658 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மாநிலத்தின் மற்றப் பகுதிகளுக்குச் செல்ல 7,076 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்