முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கந்தர்வகோட்டை வித்யா விகாஸில் என்.சி.சி. மாணவர்களுக்கு பாராட்டு விழா

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      புதுக்கோட்டை

சென்னையிலிருந்து புறப்பட்டு சைக்கிள் பயணமாக வரும் என்.சி.சி. மாணவர்களுக்கு கந்தர்வகோட்டை வித்யா விகாஸ் கல்வி நிறுவனத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

‘உடலுறுப்பு தானம் மற்றும் குடிநீர் சேமிப்பை’ வலியுறுத்தி சென்னையைச் சேர்ந்த என்.சி.சி. மாணவர்கள் 1000 கி.மீ சைக்கிள் பயணமாக சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் இன்று கந்தர்வகோட்டை வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களை வந்தடைந்தனர். அவர்களுக்கு வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளியின் செயல் அறங்காவலர் பாஸ்கரன் அவர்களை வாழ்த்துகையில் பல்வேறு காரணங்களால் உடலுறுப்பை இழந்து தவிக்கும் எண்ணற்றோருக்கு உதவிடும் வகையில் உடலுறுப்பு தானம் குறித்தும் நிகழ் காலத்திற்கேற்றவாறு குடிநீர் சேமிப்பை வலியுறுத்தியும் மேற்கொண்ட இப்பேரணி வெற்றிபெற வாழ்த்தினார். செயல் அறங்காவலர் கார்த்திகேயன் பேசுகையில் என்.சி.சி. மாணவர்களின் முயற்சிகள் எப்போதும் பாராட்டுக்குரியதாகவே அமையும் எனத் தெரிவித்து வித்யா விகாஸின் மாணவர் ஹரி புதுடில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளத்தேர்வு செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு அனைவரையும் வாழ்த்தினார்.

அப்போது பள்ளியின் நிர்வாக அலுவலர் சதாசிவன்இ பள்ளி முதல்வர்கள் நாகம்மாள்இ சரவண ஐயப்பன்இ அன்னபூரணி பாலன் ஆகியோர் உடனிருந்தனர். சென்னை ஜேப்பியார் தொழில் நுட்பக் கல்லூரியிலிருந்து மரிய வில்சன் ஏற்பாட்டின்பேரில் இப்பயணம் மேற்கொள்ளும் 24 என்.சி.சி. மாணவர்களுடன் சுபேதார் கலைவேந்தன் மற்றும் என்.சி.சி. ஆபிஸர் கணேசன் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்