முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகை: சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ் சேவை தொடங்கியது

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த  ஊருக்கு பயணிகள் செல்ல சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ் சேவை  இயக்கம் தொடங்கியது.

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு  தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்குகிறது. சிறப்பு பேருந்துகள் நேற்று   (புதன்கிழமை) முதல் 13-ந்தேதி வரை இயக்கப்படுகிறது. வெளியூர் சென்றவர்கள்  சென்னை திரும்ப வசதியாக 15, 16, 17 ஆகிய நாட்களிலும் சிறப்பு பஸ்கள்  விடப்பட்டுள்ளது.

சென்னையில் 5 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் புறப்பட்டு  செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பேருந்துகள் செல்ல வசதியாக இந்த  சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்களில் செல்லக் கூடியவர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.  நேற்று வரை ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதில் சென்னையில் இருந்து 70 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள். நேற்று  9  ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்து  இருக்கிறார்கள். பொங்கல் சிறப்பு பஸ் நேற்று  முதல் இயக்கப்படுகிறது. வழக்கமாக செல்லக்கூடிய  2,275 பஸ்களும் கூடுதலாக 794 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்கப்படுகின்றன.

இந்த பஸ்கள் காலை 10 மணி முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 5 பஸ் நிலையங்களில்  இருந்து புறப்பட்டு சென்றன. செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு செல்லக்கூடிய பஸ்கள் அண்ணாநகர்  மேற்கு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. முன்பதிவு செய்த  பயணிகள் அங்கு சென்று ஏறினார்கள்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக்கூடிய  பஸ்கள் அடையாறு காந்தி நகரில் உள்ள மாநகர பஸ் நிலையத்தில் இருந்து  புறப்பட்டு செல்கிறது. பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி,  கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள்  இயக்கப்பட்டது.

தாம்பரம் சான்டோரியம் பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி  வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் புறப்பட்டு  செல்கின்றன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை,  தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு  செல்லக்கூடிய பஸ்களும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி,  விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம்,  கோவை ஆகிய நகரங்களுக்கு இங்கிருந்து சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன.தாம்பரம், பெருங்களத்தூர் பஸ் நிலையங்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு  ஊரப்பாக்கத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு  பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் அந்தந்த பஸ் நிலையங்களுக்கு காலையில் அனுப்பப்பட்டு அங்கிருந்து பயணிகளை ஏற்றிச் சென்றது. பொங்கல் கொண்டாடுபவர்கள் பெரும்பாலும் கடைசி நேர பயணத்தையே  மேற்கொள்வார்கள். அதனால் 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கூட்டம் அதிகமாக  இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இன்று  (வியாழக்கிழமை) 1779 சிறப்பு பஸ்களும் நாளை  1872 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. முன்பதிவு செய்த பயணிகள் தாங்கள் பயணம் செய்ய வேண்டிய பஸ் நிலையத்திற்கு  பஸ் புறப்படுவதற்கு முன்பே செல்ல வேண்டும் என்று கேட்டுக்  கொள்ளப்படுகிறார்கள். கோயம்பேடு பஸ் நிலையத்தின் பின்புறம் தற்காலிக நடைமேடைகள்  அமைக்கப்பட்டுள்ளது. 7,8,9 ஆகிய தற்காலிக நடைமேடையில் முன்பதிவு செய்யாத  பயணிகள் பயணம் செய்யலாம். திருச்சி, மதுரை, சேலம் போன்ற ஊர்களுக்கு  அங்கிருந்து சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்லும்.  இதுதவிர 1, 2 நடைமேடைகளும் முன்பதிவு இல்லாத பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 3, 4, 5, ஆகிய நடைமேடைகளில் முன்பதிவு செய்த பயணிகள் பயணம் செய்ய  பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago