இங்கிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டம்: கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட டோனிக்கு சக வீரர்கள் புகழாரம்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      விளையாட்டு
dhoni 2017 1 11

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில்  கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட டோனிக்கு, யுவ்ராஜ் சிங் உள்ளிட்ட சக வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
அணி வீரராக...

இந்திய அணியின் கேப்டன் பதவியில்  இருந்து விலகி ஒரு வீரராக நீண்ட கால இடைவெளிக்கு பின் டோனி வரும் இங்கிலாந்து தொடரில் விளையாடுகிறார். டோனி, இந்திய அணிக்கு அறிமுகமான புதிதில் யுவராஜ் சிங்குடன் இணைந்து பல போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

டோனிக்கு பாராட்டு


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் யுவராஜ்சிங் சேர்க்கப்பட்டு இருப்பதால், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் களம் காண்கிறது. இதற்கிடையே, யுவராஜ்- டோனி இடையேயான நட்பில் விரிசல் உள்ளதாக அவ்வப்போது செய்திகளும் வெளியாகி வந்த நிலையில், இதை பொய்யாக்கும் வகையில் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டோனி பெருமிதம்

டோனியின் தோள் மீது கைபோட்ட படி, அவரை கேப்டனாக நீங்கள் சிறப்பாக செயல்பட்டீர்கள். 3 பெரிய வெற்றிகள், 2 உலக கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்து உள்ளீர்கள். பழைய டோனியை பார்ப்பதற்காக தருணம் இது” என்று தெரிவித்துள்ளார்.  மேலும் அந்த வீடியோவில், டோனியிடம் கேப்டனாக உங்கள் பயணம் எப்படி என்று கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதிலளித்த டோனி, இந்த பயணம் சிறப்பாக இருந்தது. உங்களைப்போல சிறப்பான வீரர்கள் இருந்தனர். இதனால், எனது பணி எளிதாக இருந்தது. எனது 10 ஆண்டு காலத்தை அனுபவித்து விளையாடினேன். மீதமிருக்கும் காலத்திலும் இது தொடரும் என்று நம்பிக்கை உள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார். டோனியுடனான தனது நட்பு குறித்து யுவராஜ் அதில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதே போல் சிறப்பாக செயல்பட்டதற்காக மற்ற வீரர்களும் டோனிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: