ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னரே நடவடிக்கை : மத்திய அமைச்சர் தகவல்

சனிக் கிழமை, 21 ஜனவரி 2017      இந்தியா
jallikattu new

புதுடெல்லி  - சுப்ரீம் கோர்ட்டு  தீர்ப்பு வெளியான பின், ஜல்லிக்கட்டு தொடர்பான உரிய நிலைப்பாடு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் மிருகங்களை வதை செய்வதாக கூறி இந்தப் போட்டியை நடத்துவதற்கு  சுப்ரீம் கோர்ட்டு  தடை விதித்தது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இரு தினங்களுக்கு முன் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக் கட்டு போட்டி நடத்த அனுமதிக் குமாறு ஏராளமான இளைஞர்கள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்கள் போராட்டம்
நடிகர் கமல்ஹாசனும் மிருகங்களைக் காக்க வேண்டுமெனில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிவிட்டு, பிரியாணிக்கு தடை விதிக்க வேண்டும் என குரல் எழுப்பினார். மேலும் தமிழக அரசு சார்பிலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே கூறியதாவது:-

விரைவில் தீர்ப்பு
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு தற்போது  சுப்ரீம் கோர்ட்டின்  நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வெளியாக வில்லை. தீர்ப்பு வெளியானதும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தேவையான நிலைப்பாட்டை எடுக்கும். தீர்ப்புக்காக மட்டுமே தற்போது மத்திய அரசு காத்துக் கொண்டிருக்கிறது.  சுப்ரீம் கோர்ட்டின்  தீர்ப்பு இன்றோ அல்லது நாளையோ வெளியாகலாம். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து  சுப்ரீம் கோர்ட்டும் நல்ல தீர்ப்பையே வழங்கும் என நம்புகிறோம். தமிழகத்தின் பாரம்பரியம் என்னவென்பதை நீதிமன்றம் நன்கு அறியும்.


முந்தைய அரசால்...
மிருகங்களை காட்சிப்படுத்தவும், பழக்கப்படுத்தவும் உருவாக்கப்பட்ட தடைப் பட்டியலில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காளைகளையும் சேர்த்து விட்டது. அதுதான் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு காரணம். அந்தப் பட்டியலில் இருந்து காளையை நீக்கிவிட்டதாக நீதிமன்றத்திடம் தெளிவாக விளக்கி இருக்கிறோம். ஜல்லிக்கட்டு மிருகத்தை வதைக்கும் விளையாட்டு அல்ல. தமிழக மக்களின் கவலையை மத்திய அரசு நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக மட்டுமே மத்திய அரசு அமைதி காத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சுவாரசிய பயணம்

சீனாவில் இருந்து விமானம் ஒன்று, 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி புறப்பட்டு, அமெரிக்காவின்  சான்பிரா ன்சிஸ்கோ நகரில் 2016 டிசம்பர் 31-ம் தேதி தரையிறங்கியு ள்ளது. இதற்கு அமெரிக்காவில் புத்தாண்டு கடைசியில்  பிறந்ததுதான் காரணம். இதனா ல்தான் விமானம், முந்தைய ஆண்டின் கடைசி தேதியில் தரையிறங்கியுள்ளது.

புதிய உறுப்பு

உடற்கூறியல் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனித உடலின் குடல் பகுதியை வயிற்றுடன் இணைக்கும் 'நடுமடிப்பு', (Mesentery) இத்தனை காலமாக பல்வேறு திசுக்கள் ஒன்றிணைந்த ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு வந்தது. இந்நிலையில், அயர்லாந்தை சேர்ந்த லிமெரிக் பல்கலைக்கழகத்தின் ஜெ.கேல்வின் காஃப்பே என்ற ஆராய்ச்சியாளர் வயிற்றின் நடுமடிப்பு பகுதியானது, தொடர்ச்சியான உள்கட்டமைப்பினை கொண்டதொரு தனிஉறுப்பு என்று உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்த ஆய்வுகள் தொடந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேரம் அதிகம்

பூமி சுற்றுப்பாதை தொடர்பாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் படி, பூமியில் ஏற்பட்டு வரும் சில மாற்றத்தால் இதுவரை 24 மணி நேரமாக இருந்த ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறவுள்ளதாகக் தெரிவித்துள்ளனர். கடந்த 27 நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அளவு விரிவடைந்து வருகிறதாம். இந்த இரண்டு மில்லி நொடிகள் என்பது ஒரு நிமிடமாக மாற இன்னும் 6.7 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என கணக்கிட்டுள்ளனர். அதன்படி, இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் என்கின்றனர்.

சிறுநீரகத்தை பாதுகாக்க

இரண்டு டீஸ் பூன் மல்லி விதைகளை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து மறு நாள் காலை அதனை வடிகட்டி குடிக்க சிறுநீரில்  உள்ள  பாதிக்கப்பட்ட செல்கள் அழியும். வெள்ளக்கரிக்காய் ஜூஸை தினமும் இருவேளை குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீரில் வெளியேறி, உடலை  குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

விண்வெளியிலும்

பூமிக்கு வெளியே உள்ள குப்பைகளை அகற்ற மிகப்பெரிய மீன்வலையை அனுப்பியுள்ளது, ஜப்பான். சர்வதேச விண்வெளி மையத்திற்கு அந்த வலை ராக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ளது. இந்த மீன்வலை ஸ்டீல் மற்றும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியில் இருந்து வெளிவரும் மின்சாரத்தின் மூலம் பூமியைச் சுற்றி வரும் குப்பைகளின் இயக்கத்தை மெதுவாக்கி, அவற்றை கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் வசதி

விபத்தை தவிர்க்கும் வகையில், தானாக இயங்கக்கூடிய ஸ்கூட்டரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஒரு நபர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த ஸ்கூட்டரில் நான்கு சக்கரம் உள்ளது.இதன் எடை 50 கிலோ ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ஸ்கூட்டர் பயணிக்கும் போது இடையூறுகள் வந்தால் அதனை கண்டறிவதற்காக இதில் சென்சார்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.

குரங்கு வடிவில் ஏலியன்ஸ் அதிர்ச்சியூட்டும் நாசா....

ஏலியன்ஸ் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது யு.எப்.ஓ என்ற அமைப்பு தகவலை கொடுத்து வருகிறது. அதன்படி, செவ்வாய் கிரகத்தில் குரங்கு வடிவில் ஏலியன்ஸ் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், பெரிய அளவிலான சிலந்தி மற்றும் நத்தைகள் வடிவில் ஏலியன்ஸ் காணப்படுவதாக கூறியுள்ளது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்சி மையத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது. சமீபத்தில் நாசா, செவ்வாய் கிரக்ததில் ஆறு இருந்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ள நிலையில், அங்கு ஏலியன்ஸ் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது, செவ்வாயில் குடியேறும் மனிதனின் ஆர்வத்தில் பீதியை கிளப்பியுள்ளது.

நீண்ட சேவை

சீனா, தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு நேரடி சரக்கு ரயிலை அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் உள்ள யுவூ நகரிலிருந்து லண்டன் மாநகருக்கு இந்த சரக்கு ரயில் சேவை துவங்கப்பட்டு இருக்கிறது.இதன்மூலம், கஜகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய பல தேசங்களை கடந்து லண்டன் மாநகரை அந்த ரயில் அடையும். யுவூ மற்றும் லண்டன் நகரங்களுக்கு இடையிலான கிட்டத்தட்ட 12,000 கிமீ தூரத்தை 18 நாட்களில் கடக்க இருக்கிறது இந்த சரக்கு ரயில்.

இதுவும் காரணம்

பூமிக்கு அடியில் செலுத்தப்படும் கழிவுநீரால் நிலத்தட்டுகள் நகரும் நிகழ்வு ஏற்பட்டு, அதன்மூலம் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கழிவுநீரைச் செலுத்த பாதுகாப்பான இடங்கள் குறித்து ’ஸ்ட்ரெஸ் மேப்ஸ்’ என்று அழைக்கப்படும் வரைபடங்களை அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

புத்தாண்டு சுவாரசியம்

நியூசிலாந்து நாடு முதன்முதலில் புத்தாண்டை வரவேற்றது. அந்த வரிசையில் மற்றுமொரு சுவாரசியமாக இந்த ஆண்டின் முதல் குழந்தை பிரிட்டன் நாட்டில் பிறந்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த பாரதி தேவி-அஷ்வானி குமார் தம்பதியருக்கு 00.01 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2.72 கிலோ எடையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு பெற்றோர் எல்லினா குமாரி என பெயர் வைத்துள்ளனர்.இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஆரிவ் குமார் என 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக பிறந்தது. குறிப்பாக இந்த ஆண்டின் முதல் குழந்தையாக பிறந்தது பாரதி-அஷ்வானி தம்பதியரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கவலை வேண்டாம்

வங்கியில் பணம் இருந்தாலும் கையில் பணம் இல்லாத கஷ்டத்தைப் போக்க உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை டோர் டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை ஸ்நாப் டீல் அறிவித்துள்ளது. இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான ஸ்நாப்டீல் நிறுவனம், ஒரு ரூபாய் கட்டணத்தில் 2,000 ரூபாய் பணத்தினை டோர் டெலிவரி மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் [email protected] என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் 2,000 ரூபாயை ஆர்டர் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. டோர் டெலிவரி முறையில் உங்கள் வீட்டுக்கு வரும் டெலிவரி செய்பவரிடம் உள்ள பிஓஎஸ் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டினை ஸ்வைப் செய்து நீங்கள் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஸ்நாப்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக குர்காவுன் மற்றும் பெங்களூரு நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், மற்ற இந்திய நகரங்களுக்கும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

டாப் 5

2016-ல் ஸ்மார்ட்போன் சந்தையில், ஒன்பிளஸ் 3T, சியோமி ரெட்மி 3s பிரைம், சாம்சங் கேலக்ஸி S7, கூகுள் பிக்சல் XL, ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் போன்றவை டாப் 5 இடத்தில் இடம் பிடித்துள்ளன. இந்த ஆண்டு வெளியிட்ட ஐபோன் 7 பிளஸ் இரட்டை கேமராக்களுடன் வெளியானது கேமரா ப்ரியர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது.