முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் 3,03,492 மாணவ, மாணவியர்களுக்கு ரூ 82 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      திருச்சி

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 2011 முதல் 2015 வரை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்;மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் துறை சார்பில் 3 இலட்சத்து 03 ஆயிரத்து 492 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 82 கோடியே 19 இலட்சத்து 69 ஆயிரத்து 945 மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.

 

இட ஒதுக்கீடு

 

இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

தமிழக அரசின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர், இடஒதிக்கிட்டை செயல்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மனித வளமே மாநிலத்தின் மிகச் சிறந்த வளமாக இருக்க முடியும் என்ற உயர்ந்த எண்ணத்தினை வலியுறுத்தும் விதமாக, சமுதாயத்தில் பின் தங்கிய நிலையிலுள்ளவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாக அவர்தம் கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கிடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆங்கில வழிக் கல்விக்கான கற்பிப்புக் கட்டணம் பள்ளிப்படிப்பு உதவித்தொகையாக 9 ஆயிரத்து 936 பிற்பட்டோர் மாணவ-மாணவியர்களுக்கு ரூபாய்16 இலட்சத்து 94 ஆயிரத்து 450மும், 4 ஆயிரத்து 468 மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்;மரபினர் மாணவ-மாணவியர்களுக்கும் ரூபாய்10 இலட்சத்து 05 ஆயிரத்து 150மும், பள்ளிமேற்படிப்பு உதவித்தொகையாக 3ஆயிரத்து 658 பிற்படுத்தப்பட்டோருக்கு ரூபாய்18 இலட்சத்து 29 ஆயிரம்மும் 1 ஆயிரத்து 339 மிகப்பிற்பட்டோருக்கு ரூபாய் 6 இலட்சத்து 69 ஆயிரத்து 500 உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 75 கல்லூரிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 75 ஆயிரத்து 544 பிற்படுத்தப்பட்டோர் நல மாணவ-மாணவியர்களுக்கு ரூ.25 கோடி செலவிலும் 41 ஆயிரத்து 886 மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ-மாணவியர்களுக்கு 15 கோடி செலவிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

 

நிதி உதவி

 

ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இத்துறையின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 52 ஆயிரத்து 186 மாணவிகளுக்கு ரூ.329 இலட்சமும், கடந்த 5 ஆண்டுகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்; 103 நபர்களுக்கு ரூ.2 இலட்சத்து 500மும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 72 நபர்களுக்கு ரூ.2 இலட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் நினைவு விருது வழங்கம் திட்டத்தின் கீழ் 12ம் படித்து, தொழிற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் முடிக்கும் வரை கடந்த 5 ஆண்டுகளில் 273 மாணவ, மாணவர்களுக்கு ரூபாய்23 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் பயின்று 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தனியார் பள்ளியில் கல்வி பயின்றிட கடந்த 5 ஆண்டுகளில் 100 மாணாக்கர்களுக்கு ரூ.28 இலட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

விலையில்லா மிதிவண்டி கடந்த ஐந்து ஆண்டுகளில் பிற்பட்டோர் நல 57 ஆயிரத்து 753 மாணாக்கர்களுக்கு ரூபாய் 16கோடியே 17 இலட்சத்து 87 ஆயிரத்து 343 செலவிலும், மிகப்பிற்படுத்தப்பட்டோர்ஃசீர்;மரபினர் நல 39 ஆயிரத்து 586 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 12 கோடியே 74 இலட்சத்து 97 ஆயிரத்து 707மும், சலவை இயந்திரங்கள் 410 பயனாளிகளுக்கு ரூபாய் 17 இலட்சத்து 68 ஆயிரத்து 080ம் செலவில் விலையில்லா சலவைப்பெட்டியும், 470 பயனாளிகளுக்கு ரூபாய் 16 இலட்சத்து 78 ஆயிரத்து 050ம் செலவில் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சொந்தமாக விட்டுமனை இல்லாத 134 பயனாளிகளுக்கு ரூபாய்20 இலட்சம் 22 ஆயிரத்து 215ம் செலவில் விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.

நரிக்குறவர் நலவரியத் திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் 459 பயனாளிகளக்கு ரூபாய் 24 இலட்சத்து 42 ஆயிரம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார முன்னேற்றத்திற்காக தொழில் புரிய குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2103 பயனாளிகள் ரூ.5 கோடியே 1 இலட்சத்தில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு உதவித்தொகை, கண்கண்ணாடி உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் உதவித்தொகை போன்ற உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 136 பயனாளிகளுக்கு ரூபாய் 2 இலட்சத்து 35 ஆயிரத்து 450 செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இம்மாவட்டத்தில் என மொத்தம் கடந்த ஐந்தாண்டுகளில் 2011 முதல் 2015 வரை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்;மரபினர்; மற்றும் சிறுபான்மையினர் நலன் துறையின் சார்பில் 3 இலட்சத்து 03 ஆயிரத்து 492 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 82 கோடியே 19 இலட்சத்து 69 ஆயிரத்து 945 மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்