முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபநாசம் வட்டத்தில்122 பயனாளிகளுக்கு ரூ.74.36 லட்சம் மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம் மற்றும் காசோலை : அமைச்சர் இரா.துரைக்கண்ணு வழங்கினார்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறையின் மூலம் திருமண நிதியதவி திட்டத்;தின் கீழ் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும்காசோலை வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, . தலைமையில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு நேற்று(11.01.2017) வழங்கினார்.

வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு சமூக நலத்துறையின் மூலம் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் மற்றும் காசோலை 122 பயனாளிகளுக்கு ரூ.74,36,570 மதிப்பீட்டிலும், வருவாய்த் துறையின் மூலம் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து நிவாரண உதவித் தொகை, ஆண் பெண் திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை என 20 பயனாளிகளுக்கு ரூ.2,92,500 மதிப்பிலான காசோலைகளும், 21 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும் வழங்கி பேசியதாவது,

 

தள்ளுபடி

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா விவசாயிகளின் நலன் காப்பதற்காக விவசாயக் கடன் ரூ.5780 கோடி தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டு உத்தரவிட்டுள்ளார்கள். குறுவை சாகுபடி திட்டத்தின் கீழ் வேளாண் உற்பத்தி அதிகரிக்கவும் ரூ.54.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் மற்றும் சம்பா தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ.64.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். உச்ச நீதி மன்றம் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டும் கர்நாடகா அரசு மறுத்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை பொய்த்துள்ளது. இதனால் தமிழகத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள பயிர்கள் போதிய மழை இல்லாமல் கருகி வருகிறது.

திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கமும், ரூ.50,000மும், பட்டப்படிப்பு அல்லாத பெண்களுக்கு தாலிக்கு தங்கமும், ரூ.25,000மும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகள் பட்டயப் படிப்பு வரை படிக்க வைக்கின்றனர்.

. தமிழக அரசு அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. இந்த அரசு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பாதுகாக்கும் அரசாக எப்பொழுதும் இருக்கும். இது போன்ற திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து கிடைத்திட இந்த அரசுக்கு மக்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசினார்.

முன்னதாக இராஜகிரியில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி சேலைகள் வேளாண்மைத்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், கும்பகோணம் சார் கலெக்டர் பிரதீப்குமார், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராம்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.மோகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கே.கோபிநாதன் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் வெ.பாக்கியலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்