முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் நந்தகுமார் தகவல்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      பெரம்பலூர்

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பெரம்பலூர் மூலம் வழங்கப்படுகிறது. எழுதப்படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை இத்திட்டத்தில் பயன்பெறலாம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்தவராக இருக்கவேண்டும். அதாவது 31.12.2015 அதற்கு முன்னதாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும். 31.12.2016 அன்று தாழ்த்தப்பட்டபழங்குடியினத்தவர்கள் 45 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதேபோன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. அரசால் வழங்கப்படும் பிற உதவித்திட்டங்கள் ஏதும் பெறுபவராக இருத்தல் கூடாது. மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவஃமாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம்.

 

கல்வி சான்று

 

மனுதாரர்கள் தங்களுடைய அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை, ஒரு புகைப்படம் மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்கள் பெயரில் துவங்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 28.02.2017-க்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்து உதவித்தொகை பெறலாம் மேலும் இத்திட்டத்தின் மூலம் ஏற்கனNவு பயனடைந்தவர்கள் புதிதாக விண்ணப்பம் பெற தேவையில்லை.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago