முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2604 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு : அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் வழங்கினார்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பினை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ்,, தலைமையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து முன்னிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.

 

அமைச்சர் பேச்சு

 

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி பேசியதாவது:

தமிழகஅரசு கூட்டுறவுத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதன்படி தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பினை பொங்கலுக்கு முன்னரே நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் உள்ள எம்.எம்.577, அன்னவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 711 குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலுப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 563 குடும்ப அட்டைதாரர்களுக்கும், எம்.எம்.572 மலைக்குடிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 621 குடும்ப அட்டைதாரர்களுக்கும், எண்.7 கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 709 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என மொத்தம் 2604 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரிபருப்பு, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகஅரசின் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் இதன் மூலம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆறுமுகம் (கந்தர்வக்கோட்டை), கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ந.மிருணாளினி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் செல்லத்துரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் இராஜசேகரன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் ராமசாமி, கார்த்திக்பிரபாகரன், ஆத்மா குழுத்தலைவர் சாம்பசிவம், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்