15 மாத தடைக்கு பிறகு களம் இறங்குகிறார் ஷரபோவா

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      விளையாட்டு
Sharapova 2017 1 11

மாஸ்கோ : 15 மாத தடை காலத்திற்கு பிறகு ஏப்ரல் மாதம் ஜெர்மனியில் நடக்கும் ஸ்டட்கர்ட் கிராண்ட்பிரி டென்னிஸ் போட்டியின் மூலம் ஷரபோவா மறுபிரவேசம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.

ஊக்கமருந்தால் தடை

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவாவுக்கு 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. தடை காலம் ஏப்ரல் மாதம் முடிவுக்கு வருகிறது. மீண்டும் டென்னிஸ் போட்டிக்கு திரும்ப தன்னை ஆயத்தப்படுத்தி வரும் ஷரபோவா, தடை காலத்திற்கு பிறகு ஏப்ரல் மாதம் ஜெர்மனியில் நடக்கும் ஸ்டட்கர்ட் கிராண்ட்பிரி டென்னிஸ் போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.
இந்த போட்டியில் அவர் மூன்று முறை பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: