சிகாகோவில் நடந்த பிரியாவிடை உரையில் அமெரிக்கர்களுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்த ஒபாமா!

செவ்வாய்க் கிழமை, 17 ஜனவரி 2017      உலகம்
obama farewell(N)

சிகாகோ  - சிகாகோவில் நடைபெற்ற பிரியாவிடை உரையில் அமெரிக்கர்களுக்கு கண்ணீருடன் ஒபாமா நன்றி தெரிவித்தார்.

பிரியாவிடை உரை
தற்போதைய அமெரிக்க அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக்காலம் ஜனவரி 20ம் தேதியுடன் முடிவடைகிறது.  இதனிடையே, நேற்று சிகாக்கோவில் நடைபெற்ற பிரியாவிடை உரையில் ஒபாமா பேசினார். அதில், கடந்த வாரத்தில் எனக்கும்,  மிச்செலுக்கும் அதிகளவில் வாழ்த்துக்கள் வந்தன. அதற்காக மக்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கு இந்த நேரத்தில் நான்  நன்றி கூற விரும்புகிறேன் என்றார்.

கண்ணீர் விட்டார்
ஒவ்வொரு நாளும் நான் மக்களிடமிருந்து ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண்டு இருக்கிறேன். அதுவே என்னை அமெரிக்காவின்  சிறந்த அதிபராக்க மாற்றியது என்று கூறிய ஒபாமாவின் கண்களில் வந்த கண்ணீர் அமெரிக்க மக்களை நெகிழச் செய்தது.


பலமான நாடு
தற்போது, உலகின் பலமான நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. மேலும், வரலாற்றிலேயே அதிக அளவிலான  வேலைவாய்ப்புகளை அமெரிக்கா உருவாக்கி உள்ளது. நமது பொருளாதார வளர்ச்சியும் சிறப்பான முன்னேற்றத்தை  கண்டுள்ளது. எனினும் நாம் வளர இன்னும் நிறைய உயரம் இருக்கின்றன என்றார்.

ஒற்றுமையாக...
ஜனநாயகத்தின் மூலமே நாம் வளர்ச்சியை அடைய வேண்டும், அதுவே சாத்தியம் என்று கூறிய ஒபாமா, மக்கள் ஒற்றுமையால்  மட்டுமே மாற்றங்களும், வளர்ச்சிகளும் நிகழும் என்றார். 8 ஆண்டுகளாக அமெரிக்காவின் அதிபராக இருந்துள்ளேன். ஒன்றாகவே  வீழ்வோம் அல்லது ஒன்றாகவே எழுவோம்.

குடியேறியவர்களுக்கு...
பயங்கரவாதம் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதனை நமது குழந்தைகளுக்கு எடுத்துரைத்து அவர்களை  சிறந்த பண்புள்ளவர்களாக வளர்க்க வேண்டும். மேலும் அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்  என்றும் ஒபாமா கூறினார். அமெரிக்க வளர்ச்சியில் குடியேறியவர்களின் பங்கு முக்கியமானது என்றார்.

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அச்சம் தவிர்

இந்தியாவில் பிறந்து உலக நாடுகளை குறிப்பாக ஆங்கிலம் பேசும் மக்களை தனது பேச்சால் ஈர்த்தவர் விவேகானந்தர்.  ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வல்லமையை பெற்றவராக இருந்த போதும் அவர் தனது பள்ளி, கல்லூரி தேர்வுகளில் ஆங்கிப்பாடத்தில் சராசரியாக 45 , 50 என்ற மதிப்பெண்களை தான் எடுத்தார்.

உடல் நலத்திற்கு...

மதுகுடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்று பொதுவான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பதால் உடல்நலம் மேம்படும். அத்துடன் சமூகத்தில் பலருடன் பழக்கம் ஏற்படும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், நல்ல எண்ணம் மற்றும் செயல்பாடுகளால் உடல் நலம் மேம்படும் என கூறப்பட்டுள்ளது.

புதையல் புதிது

சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியானிங் மாகாணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய புராதனப்பொருட்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன், சீன ஹன் மன்னராட்சியின் வெண்கல காலத்தினை சேர்ந்த பானைகள், பாத்திரங்கள், இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கேள்விகுறியான மனிதர்களின் எதிர்காலம்

ஜப்பான் நாட்டில் வருகிற 2035-ம் ஆண்டிற்குள் மனிதர்களில் பாதி பேர் அலுவலகங்களில் வேலை பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. தற்போது ஐ.பி.எம். நிறுவனம் மனிதர்களைப்போல செயற்கை அறிவாற்றல் திறன் பெற்ற ரோபட்டுகளை உருவாக்கியுள்ளது. இந்த ரோபட்டுகள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்காக பணியமர்த்தப்பட்டுள்ளன. அவை, மருத்துவக் காப்பீடுக்கு அளிக்க வேண்டிய தொகைகளை கணக்கிட்டு மின்னல் வேகத்தில் தெரிவிக்கிறது. இந்த செயற்கை அறிவாற்றல் ரோபட்டுகள் மூலமாக  புகுகோகு என்ற மருத்து இன்சூரன்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.8 கோடி செலவினத்தை மிச்சப்படுத்துகிறது. அதே நேரத்தில் அந்த நிறுவனத்தின் பாதி ஊழியர்களின் வேலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

அமிர்தம் போன்ற சுவை

இந்து மதத்தில் சிவ பெருமானை துதிக்கும் பக்தர்கள் சைவர்கள் என்றும் திருமாலை தொழுபவர்கள் வைணர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். வைணர்கள் தங்களது இஷ்ட தெய்வமான மதுரை கள்ளழகர் போன்ற தெய்வங்கள் திரு உலா வரும் போது அவர்களை வரவேற்கும் விதமாக அக்கார வடிசல் என்ற ஒரு இனிமையான பிரசாத்தை உருவாக்குவார்கள். தூய தமிழில் அக்காரம் என்பது இனிப்பை குறிக்கும் வெல்லத்திற்கான பெயராகும். இந்த வெல்லத்தை பயன்படுத்தி தயாரிக்கும் அக்கார வடிசல் பிரசாதம், நெய், முந்திரி, திராட்சை போட்டு நன்றாக குழையும் வகையில் அரிசியை தண்ணீருக்கு பதிலாக பாலை சுண்ட காய்ச்சி அதில் போட்டு குழைவாக வடிப்பார்கள். இந்த அக்கார வடிசல் சுவை அமிர்தமாக இருக்கும்.

சளி பிரச்சினைக்கு...

நெஞ்சில்  சளிக்கட்டிக்கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து அடிக்கடி இருமி வயிற்று வலி ஏற்படுவர்களுக்கும் ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே தொடர் இருமல் குறையும். மேலும், சளியின் தாக்கம் குறையும். ஆனால் அதிகம் சேர்க்க கூடாது.

பார்வை பத்திரம்

நாம் ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவிடும்போது நமது கண்களில் உள்ள நீர் வேகமாக ஆவியாகி கண்கள் உலர்கிறது. இதனால், கண்களில் தண்ணீர் உற்பத்தி தடைபட்டு உலர் கண் நோய்கள், கண் வீக்கம் மற்றும் கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. இது தொடர்ந்தால் கண் பார்வை முற்றிலும் பறிபோகுமாம்.

ஒரே சூழல்

சூரியக் குடும்பத்தில் 10-வது கோளான புளூட்டோவில், பூமியில் காணப்படுவதை போல பனிக்கட்டிகள் காணப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், புளூட்டோ போன்ற சுற்றுச் சூழல் மற்றும் சீதோஷ்ண நிலை அமைந்த வேறு சில கிரகங்களிலும் பனிக்கட்டிகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

முதல் காற்றாடி

2000 ஆண்டுகளுக்கு முன் சீனாவை ஆண்டு வந்த ஹூவான் ஹெங் என்ற அரசன் உலகின் முதல் காற்றாடியை பறக்கவிட்டார். பின்னர் மூங்கில், மெல்லிய பட்டுத்துணி, நூலுடன் நல்ல பட்டங்களை உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும் சீனர்கள் ஒன்பதாவது மாதத்தில் ஒன்பதாவது நாளை பட்டங்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

பொழிவுக்கு பூண்டு

ஒரு பல் பூண்டை மசித்து எடுத்து பின், அத்துடன் ஒரு டீ ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் க்ளே பவுடர் சேர்த்து செய்த பேஸ்டை முகத்தை நன்கு சுத்தம் செய்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ சுருக்கம் மறைந்து முகம் இளமையாக காட்சியளிக்கும்.

முருங்கை நல்லது

முருங்கை விதைகளை அடிக்கடி சாப்பிட்டால், ரத்த  அழுத்தம் கட்டுகுள் இருக்கும். சர்க்கரை வியாதி வராமல் பாதுகாக்கும். தூக்கமின்மையை போக்கும். மூட்டு இணைப்புகளில் வரும் வலியை போக்கும். செல் சிதைவை தடுக்கும். புற்றுநோய் வரவிடாமலும் தடுக்கும். மேலும் இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

குடியமர்த்தப்பட்ட தமிழர்கள்

கடந்த 1860-ம் ஆண்டு கால கட்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிக அளவில் குடியமர்த்தப்பட்டனர். அந்நாட்டில் விளையும் கரும்பு, பருத்தி போன்ற வேளாண் பணிகளுக்காக தமிழகர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டனர். உலக நாடுகளில் வெளிநாட்டு மக்களை முதலில் குடியமர்த்திய முதல் நாடு தென் ஆப்பிரிக்காதான். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மாநிலத்தவர்கள் குடியமர்த்தப்பட்ட போது இந்தியா ஒப்பீனியன் என்ற பத்திரிகை வெளியிடப்பட்டது. அந்த பத்திரிகை தமிழில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.