முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான சேவை குறித்து அமெர்த்தியா சென் பாராட்டு : ஏர் இந்தியா பெருமிதம்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - ஏர் இந்தியா சேவை சிறப்பாக இருப்பதாக அமெர்த்தியா சென் பாராட்டு தெரிவித்துள்ளதாக  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

மோசமான சேவை
உலகின் மூன்றாவது மோசமான விமான சேவை நிறுவனம் என்று ஏர் இந்தியா என்று பிளைட்ஸ்டாட்ஸ்  நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டது. ஏற்கனவே பல்வேறு புகார்களை எதிர்கொண்டு வரும் ஏர் இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்நிறுவனம் காலதாமதமாக இயக்கப்படுவதாலேயே இத்தகைய அவப்பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

பாராட்டு
இந்த நிலையில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெர்த்தியா சென் ஏர் இந்தியா விமான சேவையை பாராட்டி கடிதம் ஒன்றை அந்நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார். 83 வயதான அமெர்த்தியா சென், டெல்லியில் இருந்து லண்டனுக்கு கடந்த 9-ம் தேதி பயணம் செய்துள்ளார். அப்போது விமான சேவை சிறப்பாக இருந்தாகவும் அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா பெருமை
அமெர்த்தியா சென் எழுதிய இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஏர் இந்தியா வெளியிட்டுள்ளது. அமெர்த்தியா சென் பாராட்டுக்களால் ஏர் இந்தியா பெருமைப்படுவதாகவும் அந்த ட்விட்டரில் தெரிவித்து கடிதத்தையும் அதில் வெளியிட்டுள்ளது.

மறுப்பு
ஏர் இந்தியா மோசமான விமான சேவை வழங்குவதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த அவப்பெயரை ஓரளவு சரிகட்டும் முயற்சியில் ஏர் இந்தியா ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக பிளைட்ஸ்டாட்ஸ் வெளியிட்ட ஆய்வறிக்கை ஜோடிக்கப்பட்டது என்றும் இதனை ஏற்க முடியாது எனவும் ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்