முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க முடிவு

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

லக்னோ  - உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க உள்ளதாகவும், ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒரே மேடையில் பிரசாரம்
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, காங்கிரஸ் கூட்டணி உருவாகிறது. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சமாஜ்வாடி கட்சியில் முலாயம்சிங்குக்கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் தேர்தல் பணிகள் மந்தமான நிலையில் உள்ளது.

காங்கிரஸ் கருத்து
இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தாலும் பா.ஜனதா கட்சியின் வளர்ச்சியாலும், சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்தால்தான் ஓரளவுக்கு வெற்றி பெற முடியும் இல்லையெனில் கட்சிக்கு மேலும் வீழ்ச்சி ஏற்படும் என காங்கிரஸ் கருதுகிறது.

புது கூட்டணி
இதையடுத்து காங்கிரஸ் தரப்பில் இருந்து சமாஜ்வாடி கட்சிக்கு தூது விடப்பட்டது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான அணியுடன் காங்கிரஸ் கூட்டணி சேருகிறது. அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் கூட்டணி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஷீலாதீட் சித் பேச்சு
நேற்று முன்தினம் லக்னோவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் பேசுகையில் மத சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறி காங்கிரஸ் - சமாஜ்வாடி கூட்டணியை உறுதி செய்தார். அப்போது காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஷீலாதீட் சித் கூறுகையில், அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி போன்ற இளம் தலைவர்களுக்கு வழிவிட தயார் என்றார்.

கூட்டாக பிரசாரம்
இதற்கிடையே உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ்- சமாஜ்வாடி கட்சிகள் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்யவும் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவரும் முதல்வருமான அகிலேஷ்யாதவ் ஆகியோர் ஒரே மேடையில் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago