நாடு முழுவதும் குடியரசு தினத்தையொட்டி விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      இந்தியா
tight security1

புதுடெல்லி  - குடியரசு தினத்தை யொட்டி உள்நாட்டில் அனைத்து விமான நிலையங்களிலும் சோதனையும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

குடியரசு தினம்
வருகிற 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடியேற்றி உரையாற்றுகிறார். நாடு முழுவதும் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தீவிர கண்காணிப்பு
குடியரசு தினத்தை யொட்டி டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. தீவிரவாதிகள் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையங்களிலும், முக்கிய இடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் போலீசார் உஷார் நிலையில் இருந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


விமான நிலையங்களில் ...
இதையடுத்து நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு விமான பயணிகளும், அவர்களது உடமைகளும் கடுமையாக சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சென்னையிலும்...
விமான நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்திலும், வெளிநாட்டு விமான நிலையத்திலும் நேற்று முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: