முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் லூயி பிரெய்லி தினம் கொண்டாடிய ஆம்வே ஆப்பர்ச்சுனிட்டி பவுண்டேஷன்

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

மதுரை,

ஆம்வே இந்தியா நிறுவனத்தின் கார்பரேட் சமூகப் பொறுப்பு கரமும் மற்றும் பதிவுபெற்ற ஆதாயம் கருதா நிறுவனமுமான ஆம்வே ஆப்பர்ச்சுனிட்டி ஃபவுண்டேஷன் தமிழ்நாடு, மதுரை, இந்திய அசோசியேஷன் ஃபார் பிளைண்ட் (இந்திய பார்வையற்றோர் சங்கத்துடன்) உடன் இணைந்து லூயி பிரெய்லி தினத்தைக் கொண்டாடியது. இது, பார்வையற்றோர் படிக்கவும் மற்றும் எழுதவும் இயல்விக்கக்கூடிய பிரெய்லி முறையை கண்டுபிடித்த லூயி பிரெய்லியின் 208ம் நூற்றாண்டை குறிக்கும் விழாவாகும்.

பிரெய்லி வாசிக்கும் போட்டி, திருக்குறள் போட்டி, மாநிலங்களோடு தலைநகரங்களை பொருந்தச்செய்யும் போட்டி, பிரெய்லியில் வினாடிவினா போட்டி, கொடுக்கப்பட் பத்தியை படித்து கேள்விக்கு பதிலளித்தல் மற்றும் ஓரங்க நடிப்பு ஆகியவை உள்ளடங்கிய பலவிதமான போட்டிகளை நடத்தி லூயி பிரெய்லி தினத்தை யுழுகு கொண்டாடியது. மாணவர்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரெய்லி வாசிப்பு ரூ எழுதுவது குறித்து அவர்களுடைய அடிப்படை அறிவை பரிசோதிப்பதும் செய்யப்பட்டது. இந்த போட்டியில் 120-க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றியாளர்களை பாராட்டும் நிகழ்ச்சியுடன் இவ்விழா முடிவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆம்வே இந்தியா மேற்கு ரூ தெற்கு முதுநிலை உதவி தலைவர் திரு. சந்தீப் பிரகாஷ் அவர்கள் கூறுகையில், 'உடல் ரீதியான குறைபாடுகளைக் கடந்து வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய எதிர்காலத்திற்கு கல்வியும் மற்றும் அறிவுமே முக்கியமாகும் என்ற ஒரு உறுதியான நம்பிக்கையுடன் பார்வையற்றோரின் நலனுக்காக நாங்கள் அயராது பாடுபட்டு வருகிறோம். அனைத்து மாணவர்களிடமிருந்தும் ஆவலோடு பங்கேற்பதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது," என்றார். இந்தியாவில் டெல்லி, சண்டிகர், லூதியானா, நரேந்திரபூர், குவஹாத்தி, மும்பை, ராய்பூர், அஹமதாபாத் ரூ திருவனந்தபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் லூயி பிரெய்லி தினத்தை ஆம்வே ஆப்பர்ச்சுனிட்டி பவுண்டேஷன் ஏற்பாடு செய்து நடத்தவிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்