முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரம்பரிய உடையில் மாணவியர் கொண்டாடிய சமத்துவ பொங்கல்

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் பள்ளி மாணவியர், தமிழகத்தின் பாரம்பரிய உடையில் சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னை முகப்பேர் கிழக்கு வேலம்மாள் முதன்மைப்பள்ளியில் பாரம்பரிய பொங்கல் விழா நேற்று சிறப்புடன் நடைபெற்றது. இந்த விழாவில் ஒன்பதாம் வகுப்பு மாணவியர் தமிழகத்தின் பாரம்பரிய உடையில் வந்திருந்து இருபத்தொரு சமத்துவ பொங்கல் வைத்தது, கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது. மற்றொரு புறம் மாணவர்கள் மாட்டுவண்டியில் விளையாட்டுத்திடலை வலம் அனைவரையும் அசத்தினர்,

சமத்துவ பொங்கல் விழாவை சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் கலியன் சம்பத், குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார், பள்ளி முதன்மை முதல்வர் ஜெயந்தி ராசகோபாலன், தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் பொன்மதி முன்னிலையில் ஆசிரியர்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்