சென்னையில் 26 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது ஆணையர் ஜார்ஜ் உத்தரவு

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      சென்னை

சென்னை,

 

சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றப் பின்னணி கொண்ட நபர்கள், திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் என 26 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையர்ஜார்ஜ் கடந்த 10.01.2017 அன்று உத்தரவிட்டார்.

1. ஜெய் (எ) ஜெயக்குமார், வ/26, மேற்கு தாம்பரம் 2. நாகூர் (எ) நாகூர் மீரான், வ/24, ஆலந்தூர் 3. பிரசன்னகுமார் (எ) மோகன், வ/26, ஆதம்பாக்கம் 4.மணி (எ) டெம்போ மணி (எ) மணிகண்டன் வ/25,செட்டியார் அகரம், போரூர் 5.குட்டி (எ) குறளரசன், வ/28, ஆதம்பாக்கம் 6.தர்மதுரை (எ) சதீஷ் வ/25, பள்ளிக்கரணை, 7.ஹரிஹரன், வ/23, பள்ளிக்கரணை ஆகிய 7 நபர்கள் மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்திலும் 8. பிரவீன்குமார், வ/23, திருப்போரூர் காஞ்சிபுரம் மாவட்டம் 9.ஜேம்ஸ், வ/27,திருப்போரூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய இருவர் மீது தரமணி குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும் 10.பிரவீன்குமார், வ/ 24,பாலவாக்கம், என்பவர் மீது கானத்தூர் காவல் நிலையத்திலும் 11.எழில் (எ) எழிலேந்தி(35),கொலியனூர் தாலுகா, விழுப்புரம் மாவட்டம் என்பவர் மீது மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்திலும் 12.திருப்பதி (34), காசிமேடு என்பவர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்திலும் 13.தீனதாயளன் (29), கொருக்குப்பேட்டை 14.குமார் (எ) ரஜினி (32), பிராட்வே, ஆகிய இருவர் மீது முத்தையால்பேட்டை காவல் நிலையத்திலும், 15.லாசர் மெர்வின் விஜய் (31), குன்றத்தூர் 16.அருள் (26),அனகாபுத்தூர், 17.ரஞ்சித் (22),அனகாபுத்தூர், ஆகிய 3 பேர் மீது பல்லாவரம் காவல் நிலையத்திலும், 18.பார்த்திபன், (29), அனகாபுத்தூர் மற்றும் 19.வாலு (எ) வாசுதேவன் (எ) விஸ்வநாதன் (27), திருநீர்மலை, ஆகிய 2 பேர் மீது சங்கர் நகர் காவல் நிலையத்திலும், 20.மைக்கேல் (25), மேற்கு தாம்பரம் என்பவர் மீது தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும், 21.இளையராஜா (35), கோடம்பாக்கம் என்பவர் மீது அசோக்நகர் காவல் நிலையத்திலும், 22.ஆனந்தபாபு (26), அரக்கோணம், வேலூர் மாவட்டம் 23.முத்து (23), அரக்கோணம், வேலூர் மாவட்டம் ஆகிய 2 பேர் மீது அபிராமபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும், 24.ரமேஷ் (எ) ஏழரை ரமேஷ் (28), திருவோற்றியூர், 25.பாண்டியன் (30), திருவொற்றியூர் 26.சரவணன் (எ) சரவணக்குமார் (32), சாத்தங்காடு, திருவொற்றியூர் ஆகிய 3 பேர் மீது திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 26 பேரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், சென்னை பெருநகரக் காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவுப்படி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: