முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் உள்ள 168 நகரங்களும் காற்று மாசுபட்டால் பாதிப்பு : கிரீன் பீஸ் அமைப்பு எச்சரிக்கை

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - இந்தியாவில் உள்ள 168 நகரங்களும் சர்வதேச சுகாதார அமைப்பு கூறும் தரத்தின் அளவில் இல்லாமல், காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிரீன் பீஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.

168 நகரங்களும் ...
நம் நாட்டின் தலைநகர் புதுடெல்லி காற்று மாசுபாடு புகாரில் சிக்கி தவித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த டெல்லி அரசும், தேசிய பசுமை தீர்ப்பாயமும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்நிலையில், டெல்லி மட்டுமல்ல இந்தியாவில் உள்ள 168 நகரங்களும் சர்வதேச சுகாதார அமைப்பின் காற்று மாசுபாடு கண்காணிப்பு புகாரில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

'கிரீன் பீஸ்' ஆய்வு
இந்தியாவில் உள்ள 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிரீன் பீஸ் அமைப்பால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  நகரில் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக படிம எரிபொருள் உள்ளது.

டெல்லிக்கு முதலிடம்
சர்வதேச சுகாதார நிறுவனத்தின் அளவுகோலின் படி அதன் தரத்திற்கு அருகில் இந்திய நகரங்கள் எதுவும் இல்லை என்று கிரீஸ் பீஸ் தெரிவித்துள்ளது. தென் இந்தியாவில் வாராங்கல் உள்ளிட்ட சில நகரங்கள் தான் தேசிய சுற்றுச்சூழல் காற்று தரத்தின் படி உள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமுள்ள 20 நகரங்களில் டெல்லி தான் முதலிடத்தில் உள்ளது. கிரீன் பீஸ் அமைப்பின் தகவலின் படி காற்று மாசுபாட்டால் ஜி.டி.பி 3 சதவீதம் சரிவதோடு, 12 லட்சம் மக்கள் இறப்பதற்கு காரணமாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்