முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரவை செயலாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: தமிழக சட்டசபை 23-ம் தேதி கூடுகிறது

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      தமிழகம்

சென்னை : தமிழக சட்டசபை வரும் 23-ம் தேதி கூடவுள்ளதாக, பேரவை செயலாளர் ஜமாலுதீன் நேற்று அதிகாரப்பூர்வ தெரிவித்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளில் கவர்னர் உரை ஆற்றுகிறார்.

23-ம் தேதி கூடுகிறது

இதுகுறித்து சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

இந்திய அரசியலமைப்பு பிரிவின் கீழ், தமிழக சட்டப் பேரவையின் கூட்டத்தை வரும் 23- ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் ஆளநர் கூட்டியுள்ளார். அன்று காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் வரும் உரையாற்றுகிறார்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

2-வது கூட்டத் தொடர்

15-வது சட்டப் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் இதுவாகும். கடந்த மே மாதம் 15-வது சட்டப் பேரவை அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டத் தொடர் செப்டம்பர் வரை நடந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபரில் பேரவையின் முதல் கூட்டத் தொடரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் முடித்து வைத்தார். இதைத் தொடர்ந்து, இப்போது 2-வது கூட்டத் தொடரை ஆளுநர் கூட்டியுள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்தை சட்டப் பேரவையில் வைப்பதற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், வரும் 23-ம் தேதியன்று கூடவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே ஜெயலலிதாவின் உருவப் படம் திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உருவப் படத்தை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரங்கல் தீர்மானம்

இதேபோன்று, ஆளுநர் உரைக்குப் பிறகு அடுத்த நாளில் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன்மீது பேரவையில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் உரையாற்றுவர். இதன்பின், இந்த இரங்கல் தீர்மானம் மெளன அஞ்சலி மூலமாக நிறைவேற்றப்படும்.

அவை முன்னவர் பொறுப்பு

பேரவையில் ஆளும் தரப்பில் மிக முக்கிய பொறுப்பாக இருப்பது அவை முன்னவர் பொறுப்பாகும். அது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசம் உள்ளது. இந்த நிலையில், அவை முன்னவர் பொறுப்பு வேறொரு அமைச்சரிடம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், பல மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு இடங்கள் மாற்றப்பட்டு அவர்கள் அமைச்சர்களின் இருக்கைகளுக்குப் பின்புறம் அமர வழி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், சட்டப் பேரவையில் இருக்கைகளில் அதிகளவு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆய்வுக் குழு கூட்டம்

15-வது சட்டப் பேரவையின் 2-வது கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி விவாதிக்க உள்ளது. இந்த ஆய்வுக் குழு கூட்டம் ஆளுநர் உரைக்குப் பிறகு (வரும் 23-ம் தேதி) நடைபெறும். கூட்டத் தொடரானது, குடியரசு தின விடுமுறைக்குப் பிறகு தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாள்கள் வரை நடைபெறக் கூடும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்