முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அய்யம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி யாகம் வளர்த்து சிறப்பு வழிபாடு

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

 வத்தலக்குண்டு  -  திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி யாகம் வளர்த்து சிறப்பு வழிபாடு செய்தனர். அய்யம்பாளையத்தில் மாடு பிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்கள் ஏராளமாக உள்ளனர். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி உச்சநீதி மன்றத்தில் சாதகமான தீர்ப்பு அமைய வேண்டி அய்யம்பாளையம் திருபழனி முருகன் கோவிலில் அய்யம்பாளையம் வீரவிளையாட்டு பாதுகாப்பு நலச்சங்கம், மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர், இளைஞர்கள், ஊர்பொது மக்கள் மற்றும் அஜித் நற்பணி இயக்கம் சார்பாக நேற்று சிறப்பு யாகம் வளர்த்தனர். பின்பு முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீர விளையாட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில இணைச்செயலாளர் அருண்குமார், அஜித் நற்பணி இயக்க தலைவர் பாலவடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுபற்றி மாடு வளர்ப்பவர்கள் கூறியதாவது, சிவ ஆலயங்களில் சிவனுக்கு முன்பாக அமர்ந்திருக்கும் நந்தியை தெய்வமாக வணங்கும் தமிழ்மக்கள் ஒரு போதும் மாடுகளை துன்புறுத்தியதில்லை. காளைகளை கடவுளாகவும், எங்கள் வீட்டில் ஒருவராகவும் வளர்க்கின்றோம். தமிழர்களின் கலாச்சாரத்தில் கலந்துள்ள ஜல்லிக்கட்டு என்னும் வீரவிளையாட்டு இந்த வருடம் நடைபெறும் என நம்பிக்கையுடன் உள்ளோம். ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கலை நினைத்துக் கூடபார்க்க முடியவில்லை என்று உணர்ச்சிபூர்வமாக கருத்து தெரிவித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்