முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் போனஸ் அறிவிப்புக்கு தலைமைச் செயலக சங்கம் நன்றி

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      தமிழகம்

சென்னை : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கிய முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு தலைமைசெயலக சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து அதன் தலைவர் கணேசன் செயலாளர் வெங்கடேசன், மற்றும் நி்ர்வாகிகள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், அவர்தம் குடும்பத்தினர் மனம் மகிழும் வகையில் பொங்கல் போனசையும், சிறப்பு போனசையும் வழங்கி முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆணையிட்டுள்ளார். 2015-16-ம் ஆண்டிற்கு சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக ரூ.3000 போனஸ் வழங்கிடவும் ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கு சிறப்பு போனஸ் ரூ.1000 வழங்கிடவும் அதேபோல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஒய்வூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசு தொகையை ரூ.500 வழங்கிடவும் ஆணையிடடதற்கு முதலமைச்சருக்கு தலைமை செயலக சங்கம் சார்பில் இதயம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago