முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் புதிய ஜெர்சியுடன் களம் இறங்குகிறது இந்திய அணி

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை  - இனி ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் புதிய ஜெர்சியுடன் களம் இறங்குகின்றனர். இந்திய ஒருநாள் அணிக்கான புதிய ஜெர்சியை பி.சி.சி.ஐ டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.

புது ஜெர்சி
இந்திய கிரிக்கெட் அணிக்காக புது ஜெர்சியை பி.சி.சி.ஐ., வெளியிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு, ஒரு நாள் போட்டிக்கான புதிய ஜெர்சியை பி.சி.சி.ஐ., அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. இத்தொடரில் இருந்து இந்திய அணி  ஒரு நாள் போட்டிக்காக புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளது.

நைக் நிறுவனம்
இந்த புதிய ஜெர்சியை நைக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஜெர்சி, கடுமையான வெப்ப சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி தயாரிக்கபட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை டோனி, கோலி, அஸ்வின், ரஹானே, பெண்கள் கிரிக்கெட் கேப்டன் ஹர்மன் ப்ரீத், மிதாலி ராஜ் ஆகியோர் அறிமுகம் செய்தனர். இந்த புது ஜெர்சியுடன் இவர்கள் எடுத்த போட்டோவை பி.சி.சி.ஐ., ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்