முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக உயரிய குடிமகனுக்கான சுதந்திர ஜனாதிபதி பதக்கம்: துணை அதிபர் ஜோ பிடனுக்கு ஒபாமா வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் துணை அதிபர் ஜோ பிடன் கண்ணீருடன் விருது பெற்றார். ஜோ பிடன் ஒபாமா ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை அதிபராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்ந்த பதக்கம்
அமெரிக்க அதிபராக வருகிற 20-ந்தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். எனவே, தற்போதைய அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் மிக உயரிய குடிமகனுக்கான ‘சுதந்திர ஜனாதிபதி பதக்கம்’ (பிரசிடென்ஷியல் மெடல் ஆப் பிரீடம்’) என்ற விருது வழங்கும் விழா வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்தது.

துணை அதிபர் தேர்வு
அதில் அதிபர் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோ பிடன் ஆகியோரின் குடும்பத்தினர் உள்பட உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த விருது யாருக்கு வழங்கப்படுகிறது என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விருது வழங்கும் முன்பு மேடைக்கு வந்த ஒபாமா அந்த விருதுக்குரியவராக துணை அதிபர் ஜோ பிடன் பெயரை அறிவித்தார்.

ஆனந்த கண்ணீர்
இதை சற்றும் எதிர்பாராத ஜோ பிடன் ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார். அவரால் அதை நம்ப முடியவில்லை. அவரை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. பின்னர் எழுந்து வந்த அவரின் கழுத்தில் அந்த உயரிய விருதை ஒபாமா பெருமிதத்துடன் அணிவித்தார். ஜோ பிடன் ஒபாமா ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை அதிபராக பணிபுரிந்துள்ளார். இவர்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக திகழ்ந்தவர்கள். இவர்கள் மட்டுமின்றி மிகுந்த இரு குடும்பத்தினரும் நட்பு பாராட்டி வந்தனர். தனக்கு அளிக்கப்பட்ட விருதுக்கு நன்றி தெரிவித்து ஜோ பிடன் ஏற்புரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:-

எதிர்பார்க்கவில்லை
இந்த விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டது அமெரிக்க வரலாற்றில் ஒரு நட்சத்திர குறியாக கருதுகிறேன். நான் ஒரு அற்புதமான மனிதருடன் (ஒபாமாவுடன்) ஆட்சி பணியில் பயணம் செய்து இருக்கிறேன். அவர் நாட்டுக்காக பல தனிச் சிறப்புமிக்க நல்ல பணிகளை ஏற்றி இருக்கிறார். இந்த விருதை வழங்கி ஒபாமா என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார். இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார். கடந்த ஆண்டு இந்த விருது ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அமெரிக்காவின் 3 அதிபர்கள் மட்டுமே பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்