முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூவர்ண நிறத்தில் மிதியடி: சுஷ்மா சுவராஜிடம் மன்னிப்பு கோரிய அமேசான்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - மூவர்ண நிறத்தில் மிதியடியை தனது இணைய தளம் மூலம் விற்பனை செய்த அமோசான் நிறுவனம் அதற்காக, சுஷ்மா சுவராஜிடம் மன்னிப்பு தெரிவித்துள்ளது.

விற்பனை
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘அமேசான்’ நிறுவனத்தின் கனடா விற்பனை தளத்தில், இந்திய தேசியக்கொடி நிறத்தில் கால் மிதியடிகள் மற்றும் காலணிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது குறித்து அதுல் பாபோ என்பவர் ‘ட்விட்டர்’ சமூக வலைத்தளம் மூலம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

கடும் கண்டனம்
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அமேசான் நிறுவனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்திய தேசியக்கொடியை அவமதிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பொருட்களின் விற்பனையை உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர் இதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.தவறும்பட்சத்தில் அமேசான் நிறுவனத்தை சேர்ந்த யாருக்கும் இந்திய விசா அளிக்கப்படாது எனவும், ஏற்கனவே அளிக்கப்பட்ட விசாக்களும் உடனே ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.

விற்பனை நிறுத்தம்
இதைத்தொடர்ந்து மேற்கண்ட பொருட்களின் விற்பனையை அமேசான் நிறுவனம் நிறுத்தி உள்ளது. அதன்படி அமேசானின் கனடா விற்பனை தளத்தில் உள்ள பொருட்களின் பட்டியலில் இருந்து இந்த பொருட்களை நீக்கிவிட்டது.

வருத்தம் தெரிவித்தது
மேலும் இந்த செயலுக்காக அமேசான் நிறுவனம் வருத்தமும் தெரிவித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூ க்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், இந்திய சுங்க விதிகளையும் சட்டங்களையும் மதிப்பதில் அமேசான் இந்தியா உறுதியாக உள்ளது. இந்திய உணர்வுகளை காயப்படுத்தும் எந்த நோக்கமும் எங்ளுக்கு கிடையாது” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago