வேட்டவலம் அருகே மனுநீதி நாள் திட்டம் முகாம் 246 பேருக்கு நலத்திட்ட உதவிகள்:டிஆர்ஒ பழனி வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      திருவண்ணாமலை
photo004

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே அணுக்குமலை கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 246 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி வழங்கினார்.வேட்டவலம் அடுத்த அணுக்குமலை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களில் பொதுப்பிரச்சினைகள், நத்தம் பட்டா மாறுதல், குடும்ப அட்டை பெயர் நீக்கல், சேர்த்தல், திருத்தம் மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட 412 மனுக்கள் பெறப்பட்டன இதில் 246 மனுக்கள் ஏற்கப்பட்டது. 93 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 73 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த முகாமிற்கு கீழ்பென்னாத்தூர் வட்டாச்சியர் முருகன் முன்னிலை வகிக்க சமூக பாதுகாப்பு திட்ட வட்டாச்சியர் சுப்பரமணியன் அனைவரையும் வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி முகாமிற்கு தலைமையேற்று 246 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் வட்டவழங்கல் அலுவலர் செல்வராஜ், வேட்டவலம் வருவாய் ஆய்வாளர் கலையரசி ஆகியோர் உடனிருந்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் சண்முகம், ஆஞ்சலாமேரி, வெங்கடேசன், உதயகுமார் மற்றும் கிராம உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் வேளாண்மைத்துறை, நில அளவுத்துறை, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உணவுபொருள் வட்டவழங்கல்துறை, வனத்துறை, சுகாதாரத்துறை போக்குவரத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் அரசு தரும் சலுகைகள் மற்றும் பயன்கள் பற்றி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்கள். இதில் அணுக்குமலை, பாப்பான் கொட்டாய், பொன்னமேடு, பேப்பர்மில் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கனக்கான பொதுமக்கள் பயன்பெற்றனர். முடிவில் கீழ்பென்னத்தூர் வட்டசார் ஆய்நர் சேகர் நன்றி கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: