முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒசூர் கெலவரப்பள்ளி அணை நீரினை இராமநாயக்கன் ஏரிக்கு பைப்லைன் அமைத்து நீரிணை கொண்டு வந்து நிரப்பும் பணிகள்:அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி  கெலவரப்பள்ளி அணை நீரினை இராமநாயக்கன் ஏரிக்கு கொண்டு வந்து நிரப்பும்  பணிகளை, கலெக்டர் சி.கதிரவன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில்   கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி அவர்கள்  அடிக்கல் நாட்டி  துவக்கி வைத்தார்.       ஒசூர் சார் ஆட்சியர்  மரு.கே.செந்தில்ராஜ்  மற்றும் ஒசூர் நகராட்சி ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி இராமநாயக்கன் ஏரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணியினை பார்வையிட்டு  பேசியதாவது.ஒசூர் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒசூர் நகரத்தின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் உண்ணத திட்டமான கெலவரப்பள்ளி அணையின் நீரை அலசநத்தம் நீரேற்றும் நிலையத்திருந்து காமராஜர் காலனி நீரேற்று தரை மட்ட நீர்த்தேக்க தொட்டியின்;  மூலம் வழங்க வேண்டும் என கோரிக்கை இருந்தது.  அந்த திட்டத்ததை நிறைவேற்ற  அம்மா வழியில் செயல்படும் அரசு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.10 லட்சம் ஒதுக்கி  1200 மீட்டர் பைப்லைன் அமைத்து தினமும் 15 லட்சம் லிட்டர் நீரை மின் மோட்டார் மூலம் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம், பொதுமக்களின் பங்களிப்போடு புனரமைக்கப்பட்டுள்ள இராமநாயக்கன் ஏரியில் நிரப்பி அதன் மூலம் ஒசூர் நகரம் முழுவதும் நிலத்தடி நீர் சேமிப்பதற்கு பணிகள் இன்று துவக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து இராமநாயக்கன் ஏரியில் நீரை நிரப்பி குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நிலத்தடி நீரை சேமிப்பதற்கான ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடிநீரை உயர்த்துவதற்குண்டான வழிவகை செய்யப்பட உள்ளது.

மேலும்  ஒசூர் நகர மக்கள் எதிர்பார்க்காத வகையில் சுற்றுலாத்துறையின் மூலம் ரூ. 5 கோடி நிதியினை பெற்று படகு சவாரி மற்றும் ஏரியின் சுற்றிலும் நடைபயிற்சி பாதை ஏற்படுத்தி சுற்றுலா தலமாக  மாற்றப்படும்.  இராமநாயக்கன் ஏரிக்கு கெலவரப்பள்ளி அணையின் நீரை  பைப்லைன் மூலம் கொண்டுவந்து விடுவதன் மூலம்  ஒசூர் நகரத்தினுடைய குடிநீர் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்க வழி ஏற்படும் என  கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி  பேசினார்.இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தியாகராஜன், முன்னாள் நகர மன்ற தலைவர் ராமு, நகராட்சி பொறியாளர் குருசாமி, உதவி பொறியாளர் எம்.கண்ணன், இளநிலை உதவியாளர் நாராயணன், பணிமேற்பார்வையாளர் மஞ்நாத்சிங், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்