முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் நகராட்சிகளில் ரூ.23.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள்: கலெக்டர் .மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல்  மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் ஆகிய நகராட்சிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த ஆய்வு  நடைபெற்றது. கலெக்டர் .மு.ஆசியா மரியம்  இந்நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி, வார்டு எண்16க்குட்பட்ட ஜனதா நகர் மற்றும் பல்வேறு பகுதியில்  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.51.00 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு படித்துறை மற்றும் சோலார் மின்விளக்குகள் அமைக்கும் பணிகளையும், தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார் சாலை மேம்பாட்டுப்பணிகள் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகளையும், திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் உரக்கிடங்கில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளையும் என ரூ.7.31 கோடி மதிப்பீட்டில் பள்ளிபாளையம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் .மு.ஆசியா மரியம்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி, வார்டு எண்-19-க்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.43.90 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சாலைகள் அமைத்தல் மற்றும் சாலை ஓரங்களில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியினையும், தேசிய நகர ஆரம்ப சுகாதாரத்திட்டத்தின் கீழ் நகராட்சி வார்டு எண்-17 மாரக்காள் காடு பகுதியில் ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப்பணியினையும், இதே பகுதியில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.30.40 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சாலைகள் அமைத்தல் மற்றும் சாலை ஓரங்களில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியினையும், இதே திட்டத்தின் கீழ் நகராட்சி வார்டு எண்-6க்குட்பட்ட ஜே.கே.கே.நடராஜா நகர் பகுதியில் ரூ.37.85 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சாலைகள் அமைத்தல் மற்றும் சாலை ஓரங்களில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியினை கலெக்டர் .மு.ஆசியா மரியம்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது பள்ளிபாளையம் நகராட்சி ஆணையர் (பொ) சரவணன், குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் .மகேஸ்வரி உட்பட நகராட்சி அலுவலர்கள்; மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்