முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு : ஜிதேந்திர சிங் தகவல்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

நிலைக்குழு கூட்டம்
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை சார்பில் தன்னார்வ அமைப்புகளின் நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார்.

ஓய்வூதியம் உயர்வு
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நாட்டில் 50 லட்சம் முதல் 55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களில் 88 சதவீதம் பேரின் ஓய்வூதிய கணக்குகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல், பணிக்கொடை 2 மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம்வரை இருந்த பணிக்கொடை, ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம்வரை உயர்ந்துள்ளது. மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கற்றுக் கொள்ளலாம்
ஓய்வூதியதாரர்களின் அனுபவத்தில் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம். அவர்களின் அறிவு மற்றும் அனுபவத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். அவர்களின் சக்தியை ஆக்கப்பூர்வ முறையில் உபயோகப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இக்கூட்டத்தில், மத்திய அரசு உயர் அதிகாரிகளும், ஓய்வூதியதாரர்கள் சங்க உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்