முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் வரைவு திட்டம் குறித்த மாவட்ட அளவிலான துணை திட்டக்குழு கூட்டம்:கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2017-18ம் ஆண்டிற்கான ஆண்டு வரைவு திட்டம்  குறித்த மாவட்ட அளவிலான துணை திட்டக்குழு கூட்டம்  கலெக்டர் வா.சம்பத்,  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:தமிழக அரசால் கல்வித்துறைக்கென பல எண்ணற்ற நல திட்டங்கள் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 2016-17கல்வியாண்டில் 1752 அரசு பள்ளிகளில் தீவிர மாணவர் சேர்க்கை பேரணி இக்கல்வியாண்டில் நடத்தப்பட்டது. இக்கல்வி ஆண்டில் 17436மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் 21 வட்டார வளமையங்களில் நடைபெற்றது.  இம்முகாமில் 3008 குழந்தைகள் பங்குகொண்டனர்.  இதில் 170  குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள், 749 குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கவும், 30 குழந்தைகளுக்கு அறுவை சிகிக்சை மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 21 வட்டார வளமையங்களில் செயல்படும் பகல் நேர பாதுகாப்பு மையங்களில் 371 குழந்தைகளுக்கு தேவையான பயிற்சி மற்றும் பணிமனை, ஆதாரவள அறை மேம்படுத்துதல், மற்றும் பிரைலி புத்தகம் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப் படுகிறது.  இச்செயல்பாட்டை மேற்கொள்ளும் வகையில் 100  சிறப்பு ஆசிரியர்கள், 7  பிசியோதரப்பீஸ்ட், 21 ஊக்குநர்கள் மற்றும் 21 உதவியாளர்களுக்கான ஊதியம் பெற்று வழங்கப்படுகிறது.  இலவசக் கட்டாயக் கல்வி சட்டம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சக விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கதிட்ட கூறுகளின் 2016-17ம் கல்வியாண்டின் செயல்பாடுகள் மற்றும் 2017-18ம் ஆண்டு அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கல்வி, புதிய பள்ளிகள் தொடங்குதல், கணினி வழி கல்வி மேம்பாடு, ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான கல்வி ஆகியவற்றின் வரைவுதிட்டம் அரசுக்கு கோரப்படும். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத்,  தெரிவித்தார். இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் .ஞானகௌரி, சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் தங்கராஜ் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்