முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயரதிகாரியின் பூட்ஸ்களுக்கு பாலீஷ் போடச் சொல்லி கொடுமை : மேலும் ஒரு ராணுவ வீரர் போர்க்கொடி

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ராணுவ உயரதிகாரிகளின் பூட்ஸ்களுக்கு பாலீஷ் போடச் சொல்லி கடைநிலை வீரர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக மேலும் ஒரு ராணுவ வீரர் வீடியோ மூலம் புகார் அளித்துள்ளார்.

மோசமான உணவு புகார்
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பணிபுரியும் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரரின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எல்லைப் பாதுகாப்பு படையில் மிக மோசமான உணவு வழங்கப்படுவதாகவும், சில நேரங்களில் வெறும் வயிற்றோடு படுக்கச் செல்வதாகவும் 29-வது பட்டாலியனை சேர்ந்த தேத் பதூர் யாதவ் என்ற அந்த வீரர் குற்றம்சாட்டி இருந்தார்.

வெளிசந்தையில் விற்பனை
மேலும் அவர் தங்களுக்கு வழங்கப்படும் மூன்று வேளை உணவுகளையும் அந்த வீடியோவில் ஒவ்வொன்றாக காட்டி விளக்கினார். இது மிகவும் உருக்கமாக இருந்தது. படை வீரர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப்படும் பொருட்களை உயர் அதிகாரிகள் ஏமாற்றி வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக மற்றொரு எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஒரு அதிர்ச்சி வீடியோ
இந்நிலையில், இந்திய ராணுவத்தின் டேராடூன் 42-வது படைப்பிரிவைச் சேர்ந்த லேன்ஸ் நாயக் யாக்யா பிரதாப் சிங் என்பவர் மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை தற்போது வீடியோ செய்தியாக வெளியிட்டுள்ளார். கடைநிலை வீரர்கள் ராணுவ உயரதிகாரிகளின் பூட்ஸ்களுக்கு கட்டாயமாக பாலீஷ் போட வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதாகவும், இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு கடந்த ஜூன் மாதம் பிரதாப் சிங் கடிதம் எழுதி இருந்தார்.

குற்றச்சாட்டு
இந்த கடிதத்தின் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு டேராடூன் 42-வது படைப்பிரிவுக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி இருந்தது. அந்த கடிதத்தின்மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, தன்னை கொடுமைப்படுத்தி, தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்கு உயரதிகாரிகள் தொல்லை கொடுத்து வருவதாக தனது வீடியோ செய்தியில் லேன்ஸ் நாயக் யாக்யா பிரதாப் சிங் குற்றம்சாட்டியுள்ளார். எந்த தவறும் செய்யாத தன்மீது ராணுவ கோர்ட்டில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago