படித்த மாணவிகள் கர்வம், தலைக்கனத்துடன் வாழக்கூடாது : இந்திரா காந்தி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் டால்மியா சிமெண்ட் அதிகாரி பேச்சு

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      திருச்சி
Indira coll try

திருச்சி இந்திரா காந்தி பெண்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரி செயலாளர் வழக்கறிஞர் குஞ்சிதபாதம் (எ) ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. அனைவரையும் கல்லூரி முதல்வர் வித்யாலெட்சுமி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக டால்மியா நிர்வாக இயக்குனர் ஆர்.ஏ.கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு 1619 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார். இதில் பல்கலைக்கழக அளவில் பல்வேறு சிறப்பு இடங்களை பெற்ற மாணவிகளுக்கும் பதக்கங்களை வழங்கி சிறப்புரையாற்றியதாவது. இங்கு பட்டம் பெற்ற மாணவிகள் சவால்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது வருங்காலத்தில் சிறப்பான இடத்தை பிடித்து மக்களுக்கு சேவையாற்றிடும் மனப்பான்மை பெற வேண்டும். குறிப்பாக பட்டம் பெற்ற மாணவிகள் கர்வம் மற்றும் தலைக்கனத்தோடு இருக்ககூடாது. நல்ல பெயரை அவர்களது குடும¢பத்திற்கும் கல்லூரிக்கும் பெற்று தரத்தர வேண்டும். குறிப்பாக ஒழுக்கத்துடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பெண்கள் சாதனை புரிய பல்வேறு துறைகள் உள்ளது. அவற்றில் எது சிறப்பானது என்று தேர்ந்தெடுத்து அந்த துறையில் முன்னேற வேண்டும். தொடர்ந்து பல்வேறு பட்டங்களை பெற்று உயரிய இடத்தை அடைய வேண்டும். உங்களது குடும¢பத்தினருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளது. அதைத் புரிந்து கொள்ள வேண்டும். வண்ணத்துபூச்சிப் போல ந¦ங்கள் உயரமாக பறந்து எதிர்கால வாழ்க்கையை திட்டம¤ட்டு வாழவேண்டும். இவ்வாறு டால்மியா சிமெண்ட் உயராதிகாரி பேசினார். விழாவில் கல்லூரி தலைவர் தோட்டா ராமானுஜம், துணை முதல்வர்கள் டாக்டர்.ராமா, பி.எஸ்.வசந்தா மற்றும் பேராசிரியர்கள் மாணவிகள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: