முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைத்திருநாளையட்டி குழந்தைகள் பொங்கல் விழாவில் திருச்சி மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் பங்கேற்றார்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      திருச்சி
Image Unavailable

முகநூல் மற்றும் வாட்ஸ் அப் நண்பர்கள் குழு சார்பில் குழந்தைகள் பொங்கல் விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி புத்தூரில் நடந்த இவ் விழாவில் பண்டைய கால தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் எப்படி முறைப்படி கொண்டாடுவது குறித்து குழந்தைகள் அறியும் வண்ணம் விழாவை எய்ம்டூகை தொண்டு நிறுவனம் நடத்தியது. விழாவிற்கு நந்தகோபால் தலைமை வகித்தார். நிறுவனர் மோகன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி.செந்தில்குமார் கலந்து கொண்டு தைப்பொங்கல் மகத்துவத்தை பற்றி எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், உடல் ஊனமுற்ற குழந்தைகள் உட்பட 200 குழந்தைகளுக்கு முன்பு பொங்கல் வைத்து அனைவருக்கும் போலீஸ் எஸ்.பி. செந்தில்குமார் வழங்கியதோடு குழந்தைகளுக்கு புத்தாடைகள், புத்தகங்கள், அரிசி, வெல்லம், கரும்பு அடங்கிய பொங்கல் பைகளையும் போலீஸ் எஸ்.பி. வழங்கினார்.

 

முன்னதாக காலையில் அரிசி போட்டு பொங்கலிட்டு இனிப்பு பொங்கல் தயாரித்து அதை போலீஸ் எஸ்.பி குழந்தைகளுக்கு வழங்கினார். பின்பு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு நந¢தகோபால் பரிசுகள் வழங்கினார். மேலும், திருச்சி மாநகராட்சி நகர்நல மருத்துவமனைக்கு இலவச சக்கர நாற்காலியை திருச்சி மாவட்ட பதிவாளர் குமார் வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி பெல் நிறுவன பொதுமேலாளர் கார்மேகம் கலந்து கொண்டு பேசினார். விழாவில் டாக்டர் சேகர், மருதநாயகம், பகவதிராஜ், மணிகண்டன், மோகன்ராஜ், ஆல்பர்ட்மனோகர,¢ கஜராஜன் தமிழ்வாணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொங்கல் திருநாளையட்டி சர்க்கரை பொங்கலை வழங்கினார். விழா முடிவில் இணை செயலாளர் சிவா அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்