அழகியமணவாளம் கிராமத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் பொங்கல் விழா

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      திருச்சி
M Nallur 1

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், அழகியமணவாளம் கிராமத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

 

விழாவிற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்.

 

விவசாயிகள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பொங்கல் வைத்தனர். வயல்களில் வாடிய நெற்பயிர்கள் மற்றும் வாழைமரங்களுடன் வந்து விவசாயிகளின் தற்கொலையை தடுக்க போதிய நிவாரணம் வழங்கவேண்டும். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுகளின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என கோசமிட்டனர்.

 

இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் கூறியதாவது, தமிழகம் முழுவதும் ஏரி, தடுப்பணைகள் மற்றும் ஆறுகளில் ஆடு மாடு குடிக்க கூட தண்ணீரில்லை. காரணம் பருவ மழை பொய்த்துவிட்டது. கர்நாடகாவிடம் காவிரி நீரை மத்திய அரசு பெற்றுத்தரவில்லை. எனவே 2017ஆம் ஆண்டு எங்களுக்கு வறட்சிபொங்கலாக உள்ளது. எனவே கருப்;பு பேட்ஜ் அணிந்து கருப்பு பொங்கலாக கொண்டாடுகிறோம் என்றார். இதில் திருவரங்கபட்டி சீனிவாசன், ஜீவானந்தம், வெங்கடாசலம், அழகியமணவாளம் மணிமாறன், சண்முகம், தங்கவேல், பகோபுரபட்டி தனபால் குருசாமி, கடுக்காதுறை நடேசன், சூசைராஜ், சிவானந்தம், கோவத்தகுடி தர்மலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் செல்லதுரை நன்றி கூறினார்.

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்: