நீடாமங்கலம் அருகே நெற்பயிர்களை வறட்சியிலிருந்து காக்க பிபிஎப்எம் எனப்படும் வயல்வெளி பயிற்சி

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      நாகப்பட்டினம்
needa photo 1

நீடாமங்கலம் ளோண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் பருவநிலை மாற்றத்திற்கு உகந்த மீள் தன்மையுள்ள வேளாண் திட்டத்தின் (நிக்ரா) சார்பாக தண்ணீரின்றி காணப்படும் நெற்பயிர்களைக் பாதுகாக்க பிபிஎப்எம் எனப்படும் இளஞ்சிவப்பு மெத்தைலோ பாக்டீரியா கரைசல் தெளிக்கும் செயல்விளக்கம் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.பாஸ்கரன் தலைமையில் ராயபுரம் கிராமத்தில் நடந்தது.

 

வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் முனைவர்.இராஜாரமேஷ் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இளஞ்சிவப்பு மெத்தைலோ பாக்டீரியா கரைசல் தெளிப்பதால் உண்டாகும் நன்மைகள் குறித்து செயல்விளக்க பயிற்சி அளித்தார்.அப்போது பயிர்கள் வறட்சியாக காணப்படும் போது எத்திலின் உற்பத்தி அதிகம் இருக்கும் இது பயிர்களின் வளர்ச்சியை பாதிக்கும் ஆனால் இளஞ்சிவப்பு மெத்தைலோ பாக்டீரியா கரைசல் தெளிக்கப் படும்போது எத்திலின் உற்பத்தியாவது தடுக்கப் படுவதால் வறட்சியினால் ஏற்படும் அறிகுறிகளை உருவாக்குவது தாமதப்படுத்தும்.எனவே நெற்பயிர்கலானது போது மான அளவு தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படும் போது ஒரு ஏக்கருக்கு 200 மிலி பிபிஎப்எம் எனப்படும் இளஞ்சிவப்பு மெத்தைலோ பாக்டீரியா திரவ நுண்ணுயிரை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகள் முழுவதும் நன்கு நனையும்படி காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும் பொதுவாக பயிர்கள் பூக்கும் பருவம் மற்றும் காய் விதை பிடிக்கும் பருவத்தில் தெளிப்பது அதிகமாக பயனளிக்கும் என்றார்.மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு 04367&260666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: