திருச்சி ஜோசர் கல்லூரியில் இன்டெப் கலைவிழா நடந்தது

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      திருச்சி

திருச்சி ஜோசப் கல்லூரியில் அனைத்து துறைகளுக்கிடையேயான இன்டப் என்ற கலைவிழா 2நாட்கள் நடைபெற்றது.

 

இதில் 25 வகைகளான இலக்கிய நடனம் நாடகம், இசை, நுண்கலை போன்ற கலைப்போட்டிகளில் 1625 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளை திருச்சி அகில இந்திய வானொலி இயக்குனர் நடராஜன் தொடங்கி வைத்தார். நிறைவு விழாவில் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளுருமான ரவிமரியா கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினார். பொங்கல் விழாவையட்டி கிராமிய பொங்கலை நினைவூட்டும் வகையில் கிராமிய நடனப்போட்டிகள், இசைக்கச்சேரி, சிறப்பு நடனம் மற்றும் நாடகம் ஆகியவை நடைபெற்றது. இதுதவிர வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் கலந்துகொண்ட சிறப்பு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிறைவு விழாவில் நுண்கலை குழு மாணவர் ஒருங்கிணைப்பாளர் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக ஜோசப் கல்லூரி அதிபர் ஜான்பிரிட்டோ, சொயலார் அந்தோணிபாப்புராஜ், முதல்வர் ஆன்ட்ருஜேசா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஒருங்கிணைப்பாளர் சகாயராஜ், விமல்ஜெரால்டு, செய்தி தொடர்பு அலுவலர்கள் பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ, ஜோசப் ஆண்டனி ஆகியோர்கள் விழாவை ஒருங்கிணைத்தார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: