பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 5 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் க. நந்தகுமார் தகவல்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 5 வருவாய் கிராமங்களில் காலியாகவுள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.3500-6000 தரஊதியம் ரூ.800 என்ற ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்து ஊதியம் வழங்கப்படும்.

 

பொதுப்பிரிவு

 

அதன்படி பெரம்பலூர் வட்டம் கல்பாடி(வ) கிராம உதவியாளர் பணியிடத்திற்கு கல்பாடி (தெ), கல்பாடி (வ), அயிலூர், சிறுவாசசூர், நொச்சியம், தொரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுப்பிரிவு முன்னுரிமையற்றவர் (பெண்கள்) வகுப்பை சார்ந்தவர்களும்,பெரம்பலூர் வட்டம், மேலப்புலியூர்(கி) கிராம உதவியாளர் பணியிடத்திற்கு மேலப்புலியூர் (கி), மேலப்புலியூர்(மே), குரும்பலூர்(வ), குரும்பலூர்(தெ), லாடபுரம்(கி), லாடபுரம்(மே) உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை (பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் தவிர, (முன்னுரிமையற்றவர்) (பெண்கள்) சார்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

 

மேற்கண்ட தகுதிகளுடைய நபர்கள் அதற்கான விண்ணப்பங்களை தொடர்புடைய பெரம்பலூர், வேப்பந்தட்டை மற்றும் குன்னம் வட்டாட்சியர் அலுவலகங்களில் வெள்ளைத்தாளில் விண்ணப்பத்துடன் சான்றுகளின் நகல் (ஜெராக்ஸ்) இரண்டு பிரதிகளில் (சான்றொப்பம் இடப்பட்டது) ஆகியவற்றுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 31.01.2017 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணபிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக தொலைபெசி எண் 04328-277201, வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலக தொலைபெசி எண் 04328-264201, குன்னம் வட்டாட்சியர் அலுவலக தொலைபெசி எண் 04328-258370 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: