நாகப்பட்டினம் அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் விழா : கலெக்டர் சு.பழனிசாமி, டாக்டர்.கே.கோபால் எம்பி பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      நாகப்பட்டினம்
pro nagai

நாகப்பட்டினம் அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் 13.01.2017 அன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.கோபால் ஆகியோர் பங்கேற்று பொங்கல் வைத்து, காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு, கரும்புத் துண்டுகள் வழங்கி கொண்டாடினர்.

 

பொங்கல் விழா

 

பொங்கல் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.கோபால் பஙகேற்று பேசியதாவது, சுனாமியின் போது தாய், தந்தையர்களை இழந்த குழந்தைகள் அன்னை சத்யா அரசு காப்பகத்தில் மிகச்சிறப்பாக தங்கவைத்து உணவு வழங்கி கல்வியும் அளித்து வருகிறார்கள். இந்த விழாவில் பங்கேற்றதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த காப்பகத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது. இங்கு தங்கி பயிலும் மாணவியர்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தரும். நீங்கள் தன்னம்பிக்கையோடும், வைராக்கியத்துடனும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற இந்த பொங்கல் நன்னாளில் மனதார வாழ்த்துகிறேன்" என்றார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.கோபால் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, பொங்கல் விழாவினை தொடங்;கி வைத்தனர்.

விழாவில் வருவாய் கோட்டாட்சியர் சி.கண்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட இயக்குனர் ரோஸ்லின் ஜாய்ஸ் கிரேஸ், நாகப்பட்டினம் வட்டாட்சியர் தமிமுன் அன்சாரி மற்றும் காப்பக குழந்தைகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: