தஞ்சாவூர் மாவட்டத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் 10வது வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி : கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      தஞ்சாவூர்
pro thanjai

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2015-2016 அடிப்படையாகக் கொண்டு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் 10வது வேளாண்மை கணக்கெடுப்பு வேளாண் துறை, புள்ளியியல் துறை, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பினை நேற்று (13.01.2017) மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தொடங்கி வைத்தார்.

 

கணக்கெடுக்கும் பணி

 

வேளாண்மை ஆண்டு 2015-2016 (1.7.2015 முதல் 30.06.2016) அடிப்படை ஆண்டாக கொண்டு கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளவும், பயிற்சி வகுப்பில் வேளாண்மை முக்கியத்துவம் மற்றும் கிராம நில பதிவேடுகளின் அடிப்படையில் விவரங்களை துல்லியமாக எடுக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

கணக்கெடுப்பின் நோக்கம் மாவட்ட அளவிலான நில உபயோகம், நீர்பாசனம் மற்றும் பாசன ஆதாரங்களை துல்லியமாக கணக்கெடுக்கவும், முக்கியமாக கைபற்றுதாரர்கள், சிறு குறு, நடுத்தர மற்றும் பெரு விவசாயிகள், தனி பட்டதாரர்கள், கூட்டு மற்றும் நிறுவனங்கள் ஆகிய இனங்களை கண்டறிதல் மற்றும் பயிர் பரப்பு கண்டறிதல் ஆகும்.

இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், பயிற்சி கலெக்டர் பிரசாந்த், கும்பகோணம் சார் கலெக்டர் பிரவீன்குமார், கோட்டாட்சியர்கள் சுரேஷ் (தஞ்சாவூர்), கோவிந்தராசு (பட்டுக்கோட்டை) வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், புள்ளியியல் மற்றும் பொருளியியல் துணை இயக்குநர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சொக்கலிங்கம், புள்ளியியல் துறை உதவி இயக்குநர்கள் உதயசந்திரன், திருஞானம், செல்வம், மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: