பென்னலுார் கிராமத்தில் சுகாதார பொங்கல்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
kanchi 1

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பென்னலுார் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை. ஊராட்சிதுறை மற்றும் துாய்மை பாரத இயக்க திட்டம் சார்ப்பில் சுகாதார பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது இந்த விழாவில் சூரியனை வழிபட்டு, புதுப்பானைகளில் பொங்கலிட்டு, கரும்பு வைத்து, பொங்கல் பொங்க பொங்கலோ, பொங்கல் என்று சத்தமிட்டு மகிழ்ச்சியோடு பொங்கல் விழாவினை கொண்டாடினர்.  நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சிவானந்தம், ஊராட்சி செயலர் ராஜி, அரசினர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்  மற்றும் மாணவ மாணவியர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி சுகாதார பொங்கலை கொண்டாடினர் பொங்கல் விழாவை முன்னிட்டு கிராம பெண்கள் ஒன்று கூடி விழா மேடை முழுவதும் கோலமிட்டி பாரம்பரிய விளையாட்டி போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  பென்னலுார் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு சுகாதாரமான கிராமமாக மாற்றுவதற்கான உறுதிமொழி ஏற்று சுகாதார பொங்கலை கொண்டாடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: