கோவையில் தாலிக்கு தங்கத்துடன் திருமண உதவி தொகையை அமைச்சர் வேலுமணி வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      கோவை
JAN 13C copy

கோயம்புத்தூர் மாவட்டம்

 வேளாண்மை பல்கலைகழகத்தில் நடைபெற்ற விழாவில் 2481 பயனாளிகளுக்கு ரூ.12.80 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கத்துடன் திருமண உதவி தொகையினை  நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி, மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  வழங்கினார்.

                                                                          ------------------

                          கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழக கலையரங்கத்தில் சமூக நலத்துறையின் மூலம் பத்தாம் வகுப்பு, பட்டம்  மற்றும் பட்டயப்படிப்பு படித்த ஏழைப்பெண்களுக்கு திருமணத்திற்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண உதவித் தொகை வழங்கும் விழாவில்  தமிழக சட்டபேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி.வ.ஜெயராமன்  முன்னிலையில்  மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் .  தலைமையில்  நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி, மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  2481 பயனாளிகளுக்கு ரூ.12.80கோடி மதிப்பீட்டில் தாலிக்கு தங்கத்துடன் நிதியுதவிகளை வழங்கினார்.

 இவ்விழாவில்  நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி, மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  நலத்திட்டங்கள் வழங்கி பேசுகையில்,

            அம்மா  வருமை கோட்டிற்கு கீழ் வாழும், ஏழை எளிய பெண்களின் திருமணம் தங்குதடையின்றி நடைபெற வேண்டும் அவர்களின் பொருளாதாரம் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு நாளும், சிந்தித்து எண்ணற்ற திட்டத்தை வழங்க உத்தரவிட்டு அதன்படி, எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும், திருமண நிதியுதவித்திட்டம் மற்ற மாநிலங்களே புகழ்ந்திடும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் 5வகையான திருமண நிதியுதவித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சமூக நலத்துறையின் மூலம் முவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவுத்திருமண நிதியுதவித்திட்டம், பழங்குடியினர் பயன்பெறும் வகையில் மூவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவு சிறப்பு நிதியுதவித்திட்டம், ஏழை விதவைத்தாய்மார்களின் குடும்பம் பயன்பெறும் வகையில் ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித்திட்டம், விதவை பெண்கள் மறுமணம் செய்திடுவதை ஊக்குவிக்கும் வகையில் டாக்டர் தர்மாம்பாள் திருமண நிதியுதவித்திட்டம் மற்றும் மக்களிடையே வகுப்பு வேறுபாடுகளை களையும்பொருட்டு டாக்டர் முத்துலட்சுமிரெட்டி அம்மையார் நினைவு கலப்புத்திருமண நிதியுதவித்திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

அதில், மூவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவுத்திருமண நிதியுதவித்திட்டம் ஏழைக்குடும்பங்களுக்கு மிக உன்னத திட்டமாக திகழ்நது வருகின்றது. இதில், 10ஆம் வகுப்பு வரை படித்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ரூ.25,000மும் திருமாங்கல்யத்திற்கு 4கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.50,000மும் திருமாங்கல்யத்திற்கு 4கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருவதுடன். தற்பொழுது  அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க 8கிராம் தங்கமும் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ஒரு ஆரோக்கியமான போட்டி, இருந்திட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எல்லோரும் பட்டப்படிப்பு படித்து முழுமையான பயனைப் பெறவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். ஒரு காலத்தில் பெண்கள் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பெற்றோர்கள் இருந்த காலகட்டத்தை மாற்றி ஒவ்வொரு பெண்ணும் ஒரு சாதனையாளராக வேண்டும் என்ற நோக்குடன்  அம்மா  பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் என்றால்  அம்மா எப்பொழுதுமே தனிக்கவணம் எடுத்துக்கொள்வார்கள்.

          பெண்களின் பணிச்சுமையை குறைக்க விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கியதுடன் அனைத்துப் பேருந்துநிலையங்களிலும் தாய்ப்பால் ஊட்டும் அறை கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவித்திட்டம். பேறு கால விடுப்பு 6 மாதத்திலிருந்து 9மாதமாக உயர்த்தி வழங்கியது. தன்னம்பிக்கையுடன் வாழ விலையில்லா ஆடு, கறவை மாடு வழங்கும்திட்டம். பிறந்த குழந்தைகளுக்கான அம்மா பரிசுப்பெட்டகம் என எண்ணற்ற திட்டங்களை வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தாலே போதும், பட்டப்படிப்பு முடியும் வரை கட்டணமின்றி பயின்று வர அனைத்து திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு உறுதுணையாக இருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பட்ட மேற்படிப்பு வரை படிக்க வைத்து பொருளாதாரத்தில் நிலைநிறுத்திக் கொள்வதுடன் அரசு வழங்கிடும் திட்டங்களை முழுமையாக பெற்று பயன்பெற்றுக்கொள்ள வேண்டும்

இன்று பத்தாம் வகுப்பு படித்த 878 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவியுடன் 4கிராம் தாலிக்கு தங்கம் ரூ.3.11கோடி மதிப்பீட்டிலும் பட்டம் மற்றும் பட்டயபடிப்பு படித்த ஏழை பெண்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியுடன் 4கிராம் தங்கம் ரூ.9.69கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 2481 பயனாளிகளுக்கு ரூ.12.80கோடி மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது என  நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி, மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தெரிவித்தார்.

                இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நாகராஜன், சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஒ.கே.சின்னராஜ், அம்மன்.கே.அர்சுனன், ஆர்.கனகராஜ். எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, மாவட்ட வருவாய் அலுவலர் தா.கிருஸ்துராஜ், சமூக நல அலுவலர் ஐ.பூங்கோதை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: