முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் நிறைவு : பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்ப 17,559 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு பொதுமக்கள், மீண்டும் ஊர் திரும்புவதற்கு வசதியாக, தமிழகம் முழுவதும் நேற்று முதல் 3 நாட்களுக்கு, 17 ஆயிரத்து 559 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும், கடந்த 11-ம் தேதி  முதல் 13 ம் தேதிவரை 3 நாட்களுக்கு 17 ஆயிரத்து 693 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும், சென்னை அண்ணாநகர் மேற்கு, தாம்பரம் சானிடோரியம், பூவிருந்தவல்லி, அடையாறு மற்றும் கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து, இந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 11 ஆயிரத்து 270 பேருந்துகள் இயக்கப்பட்டன.

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் பிறபகுதிகளில் இருந்தும் கடந்த 11-ம் தேதி முதல்  6 ஆயிரத்து 423 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

சிறப்பு பஸ்கள் இயக்கம் :

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு மக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வகையில், தமிழகம் முழுவதும்  நேற்று முதல் வரும் 17-ம் தேதி வரை, மொத்தம் 17 ஆயிரத்து 559 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்பட்டு வரும் 2 ஆயிரத்து 275 பேருந்துகளுடன் கூடுதலாக, நேற்று ஆயிரத்து 130 சிறப்பு பேருந்துகளும், இன்று ஆயிரத்து 526 சிறப்பு பேருந்துகளும், 17-ம் தேதி ஆயிரத்து 2 சிறப்பு பேருந்துகளும் என இன்று முதல் 3 நாட்களுக்கு மொத்தம் 10 ஆயிரத்து 483 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையை தவிர மாநிலத்தின் மற்றப் பகுதிகளில், நேற்று ஆயிரத்து 865 சிறப்பு பேருந்துகளும், இன்று  3 ஆயிரத்து 70 சிறப்பு பேருந்துகளும், 17-ம் தேதி 2 ஆயிரத்து 141 சிறப்பு பேருந்துகளும் என 3 நாட்களுக்கு மொத்தம் 7 ஆயிரத்து 76 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்