முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவு - முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆழ்ந்த இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக முன்னாள் கவர்னர்  சுர்ஜித் சிங் பர்னாலாவின், மறைவுக்கு முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது ,

முன்னாள் கவர்னர்  சுர்ஜித்சிங் பர்னாலாவின் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த துயரமடைந்ததாகத் தெரிவித்துள்ளார். சுர்ஜித்சிங் பர்னாலா சிறந்த தேசியவாதி மற்றும் அரசியல் அனுபவம் மிக்க தலைவர் என்றும் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில முதலமைச்சராகவும், மத்திய வேளாண்துறை அமைச்சராகவும், பல மாநிலங்களின் ஆளுநராகவும் செயல்பட்டவர் பர்னாலா என குறிப்பிட்டுள்ளார். தமிழக மக்களின் மனங்களில் சிறப்பான இடத்தை பெற்ற சுர்ஜித் சிங் பர்னாலா, தமிழக ஆளுநராக 1990 முதல் 1991 வரையிலும், 2004 முதல் 2011 வரையிலும் பணியாற்றியதை சுட்டிக்காட்டியுள்ளார். சுர்ஜித் சிங் பர்னாலா மறைவால் அனுபவமிக்க நிர்வாகியை நாடு இழந்துவிட்டதாகவும், பர்னாலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago