முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமேசான் நிறுவன தயாரிப்பில் தொடரும் அவமதிப்பு - காலணிகளில் மகாத்மா காந்தியின் உருவப்படம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்திய தேசியக்கொடியை அவமதிக்கும் விதத்தில் கால் மிதியடிகளை தயாரித்து சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான், தற்போது காலணிகளில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை பொறித்து விற்பனை செய்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் சுஷ்மா கண்டனம்:

சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் அமேசான் என்ற ஆன்லைன் வர்த்தக இணையதள நிறுவனம், இந்திய தேசியக் கொடி வடிவத்தில் கால் மிதியடிகளை தயாரித்து, கனடா நாட்டில் விற்பனை செய்து வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், டிவிட்டரில் பதிவிட்டிருந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  சுஷ்மா ஸ்வராஜ், அந்நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். சர்ச்சைக்குரிய இதுபோன்ற தயாரிப்புகள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும், இதற்காக அந்நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

மீண்டும் அவமதிப்பு :

இதனைத்தொடர்ந்து, அந்த தயாரிப்பை அந்நிறுவனம் உடனடியாக திரும்பப்பெற்று, தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தது. இந்நிலையில் அமெரிக்காவில், அமேசான் நிறுவனம் தயாரித்து விற்பனையாகும் காலணிகளில் மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ள விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்