முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் வலுவான எதிர்ப்பு: ட்விட்டரை முடக்கினார் நடிகை திரிஷா

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      சினிமா
Image Unavailable

சென்னை : ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடுமையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வந்த நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கதிதை முடக்கி வெளியேறினார்.

ஜல்லிக்கட்டு தடை விவகாரம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களையும் விவாதங்களையும் தீவிரப்படுதிதியுள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு சட்ட ரீதியில் நீதிமன்றத்தை அணுகுவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் முக்கியப் பிண்ணனியில் இருப்பது 'பீட்டா' அமைப்பு.

உச்ச நீதிமன்ற தடையால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இந்த பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடந்தன.

ஆனால், பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க வாய்ப்பில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதனால் ஜல்லிக்கட்டு நடக்கும் வாய்ப்பு மங்கிப்போனதால், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், போராட்டத்தையும் வலுப்படுத்தியது.

இந்த நிலையில், பீட்டா அமைப்பின் நல்லெண்ணதி தூதராக உள்ள நடிகை திரிஷாவின் நிலைப்பாடு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

மேலும், சிவகங்கையில் நடைபெற்று வந்த அவரது 'கர்ஜனை' படப்பிடிப்பில் போராட்டம் நடதிதப்பட்டதால் படப்பிடிப்பு ரதிது செய்யப்பட்டது.  திரிஷாவுக்கு எதிராக தகாத வார்திதைகளில் போஸ்டர்களும் வடிவமைத்து வெளியிட்டன. இதனால், அவர் கடும் அதிருப்தி அடைந்தார்.  இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கதிதில் அவர் குறிப்பிடும்போது, "பீட்டா அமைப்பில் இருந்தாலும் நான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பேசியதில்லை. இதற்காக ஒரு பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் மரியாதை குறைவாக நடத்துவதுதான் தமிழ்ப் பண்பாடா?  இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் தங்களை  தமிழர்கள் என்று அழைத்துக் கொள்ளவும் தமிழ்ப் பண்பாடு பற்றி பேசவும் வெட்கப்பட வேண்டும்" என்று கடுமையாக சாடினார் திரிஷா.

மீண்டும் வெடித்த திரிஷா ட்வீட் சர்ச்சை

திரிஷாவுக்கு ஆதரவாக வந்த ட்வீட்களை ரி-ட்வீட் செய்து வந்தார். இதனிடையே "நான் ஒரு தமிழச்சி. நான் பீட்டா அமைப்பை ஆதரிக்கிறேன். மிருகங்களை கொடுமைப்படுத்துவதையும், பழங்கால முறை என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும்" என்று திரிஷாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஒரு ட்வீட் வெளியானது.  அந்த ட்வீட் வந்த சில நிமிடங்களில், "இதனை நான் ட்வீட் செய்யவில்லை. என் ட்விட்டர் கணக்கில் யாரோ ஊடுருவி விட்டார்கள்" என்று விளக்கம் அளித்திருந்தார் திரிஷா.

திரிஷா ட்விட்டர் பகக்த்தில் வெளியான ஜல்லிக்கட்டு எதிர்ப்பு ட்வீட்டை தொடர்ந்து, பலரும் அவருடைய ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு வசைபாட ஆரம்பித்தினர்.
அதன்பின், "எனது கணக்கை விட்டு வெளியேறுகிறேன். விரைவில் எனது அடுத்தகட்ட திட்டம் குறித்து தெரிவிப்பேன்" என்று திரிஷா ட்வீட் செய்துவிட்டு, தனது ட்விட்டர் கணக்கை முடக்கிவிட்டு வெளியேறினார்.

திரிஷாவின் கணக்கில் எவரேனும் ஊடுருவினார்களா, உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து உறுதியாக நம்ப முடியாத வகையில் பல்வேறு தகவல்கள் வெளியான வந்த வண்ணம் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்