முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவீன் ஜிண்டாலுக்கு எதிரான நிலக்கரி ஊழல் வழக்கு : இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது சி.பி.ஐ.

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் தொழிலதிபருமான நவீன் ஜிண்டால் மற்றும் பிறருக்கு எதிரான தனது அடுத்த விசாரணை யின் இறுதி அறிக்கையை சிபிஐ நேற்று தாக்கல் செய்தது.

நிலக்கரி ஊழல் வழக்குகளை விசாரித்து வரும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய தடய அறிவியல் ஆய் வக அறிக்கைகள், சாட்சிகளின் பட்டியல் மற்றும் அவர்களிட மிருந்து சிபிஐ பதிவுசெய்த வாக்கு மூலங்கள் ஆகியவை  தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை யில் இடம்பெற்றிருந்தன.

அறிக்கை தாக்கல் செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணை யின் முன்னேற்றத்தை இது பாதிக்கும் என சி.பி.ஐ.யை கண்டித்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள பட்டய கணக்காளர் சுரேஷ் சிங்கால் அப்ரூவர் ஆக மாறுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கோரியுள்ளார். அவர் அளித்த தகவலின்படி இந்த வழக்கை மேலும் விசாரிக்க வேண்டியுள்ளது என சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

சுரேஷ் சிங்கால் முறையீடு:

மேலும் மன்னிப்பு கோரும் சுரேஷ் சிங்கால் முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டிய லில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் அமர்கொண்டா - முர்கதாங்கல் நிலக்கரி சுரங்கத்தை ஜிண்டால் குழுமத்தின் ஜிண்டால் ஸ்டீல், ககன் ஸ்பாஞ்ச் ஆகிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் :

இந்த வழக்கில் நவீன் ஜிண்டால் தவிர, முன்னாள் நிலக் கரித் துறை அமைச்சர் தாசரி நாராயண ராவ், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா, நிலக்கரித் துறை முன்னாள் செய லாளர் எச்.சி.குப்தா உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஜிண்டால் ரியால்டி இயக்குநர் ராஜீவ் ஜெயின், ககன் ஸ்பாஞ்ச் இயக்குநர்கள் கிரிஷ்குமார் ஜுனேஜா, ஆர்.கே.சரஃப், சவுபாக்யா மீடியா நிர்வாக இயக்குநர் கே.ராமகிருஷ்ணா ஆகி யோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago