முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கியூபாவுக்கு சாதகமாக அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற நாள் முதலாக கியூபாவுடன் நீடிக்கும் அரை நூற்றாண்டு பகைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்று வந்தார்.

அதன் அடிப்படையில் கியூபாவுக்கு சென்று பிடல் காஸ்ட்ரோவின் தம்பியும், அதிபருமான ரவுல் காஸ்ட்ரோவைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பலனாக கியூபாவில் நீண்ட இடைவெளிக்குப் பின் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதே போல் அமெரிக்காவிலும் கியூபா நாட்டின் தூதரகம் திறக்கப்பட்டது.

தற்போது அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் கியூபா மீதான 20 ஆண்டு பழமையான குடியேற்ற கொள்கை யிலும் அதிபர் ஒபாமா அதிரடி மாற்றம் கொண்டு வந்துள்ளார்.  இதனால் அமெரிக்கா, கியூபா இடையிலான உறவு வலுப்பெறும் என நம்பப் படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்