முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் தனித்துப்போட்டி - பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ : உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் . யாருடனும்  கூட்டணி வைக்க மாட்டோம் என்று அந்த கட்சியின்  தலைவர் மாயாவதி திட்டவட்டமாக தெரிவித்தார்.

மோதல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது, முலாயம் சிங் யாதவின்   சமாஜ் வாடி கட்சி ஆட்சி செய்கிறது . முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ்  முதல்வராக உள்ளார்.  இந்த கட்சிக்குள் தற்போது கோஷ்டி பூசல் நிலவுகிறது. இதனால் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சமாஜ் வாடி கட்சி வெற்றி பெறுவது சந்தேகமாக உள்ளது.
 இதனால் ஆட்சியை பிடிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் , காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் ஆட்சியை பிடிக்க தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம் இந்தியாவிலேயே மிகப்பெரும் மாநிலம் ஆகும். அங்கு 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தற்போது 229 எம்.எல்.ஏக்களுடன் சமாஜ் வாடி கட்சி ஆட்சி செய்கிறது.

7 கட்ட தேர்தல்

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம்  முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரை  7 கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில்  மக்கள் செல்வாக்கு அதிகமுள்ள பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. இது குறித்து அந்த கட்சியின் தலைவர் மாயாவதி நேற்று கூறியதாவது,

பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே தேர்தலில் போட்டியிடுகிறது. சமாஜ் வாடி கட்சியுடன் பாஜ.க ரகசிய கூட்டு வைத்துள்ளது. அவர்கள்  கெட்ட நாளை நோக்கியே செல்கிறார்கள்.

காங்கிரசை பற்றி பெரிதும் கவலைப்பட வேண்டாம்  . அந்த கட்சி செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் உயிர் வாழுவதைப்போல போராடிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது ஆட்சி செய்யும் சமாஜ் வாடி கட்சியில் தலைவர் முலாயம் சிங், அவரது தம்பி சிவ்பால் யாதவ், ராம் கோபால் யாதவ் முலாயமின் மகனும் முதல்வருமான அகிலேஷ் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் தர வேண்டும் என கடந்த சில நாட்களாக வெளிப்படையாக மோதிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அந்த கட்சி முலாயம் அணி என்றும், அகிலேஷ் யாதவ் அணி என்றும்  உடைந்துள்ளது. இதனால் இரு அணிகளும் கட்சியின் சைக்கிள் சின்னம் தங்களுக்கே அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் நேரில் சென்று கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்த முடிவை எடுக்காமல் தேர்தல் ஆணையம்  ஒத்தி வைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்