முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.கவில் இருந்து விலகிய கிரிக்கெட் வீரர் சித்து காங்கிரசில் இணைந்தார் -ராகுலிடம் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  பாரதிய ஜனதா கட்சியின் எம்.பியாக இருந்த முன்னாள் கிரிக்கெட் நவ்ஜோத் சிங் சித்து அந்த கட்சியில் இருந்து விலகி தற்போது காங்கிரசில் சேர்ந்தார். அவர் காங்கிரஸ் துணை தலைவர்  ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்னர்  காங்கிரசில் சேர்ந்தார்.

எம்.பி பதவி விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து  பாரதிய ஜனதா கட்சியில் இருந்தார். அவர்  ராஜ்ய சபா எம்.பியாகவும் இருந்தார். அவருக்கும் கட்சி தலைமைக்கும் ஏற்பட்ட  கருத்து வேறுபாடு காரணமாக அவர் எம்.பி பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியில் இருந்தும் விலகினார். அவர் புதிய கட்சி துவக்குவார் என்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்  ஆத்மி கட்சியில் சேருவார் என்றும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் இது குறித்து சித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்க வில்லை.

இந்த நிலையில் அவரது மனைவி நவ்ஜோத் கவுர் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவர் அந்த கட்சிக்கு சென்ற பிறகு சித்துவும் காங்கிரசில் இணைவார் என்ற யூகம் எழுந்தது. அதனை மெய்ப்பிப்பது போல அவர் நேற்று டெல்லியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் காங்கிரசில் இணைந்தார். இந்த தகவலை காங்சிரசின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜே வாலா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் தேர்தல்

பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நேரத்தில் சித்து காங்கிரசில் சேர்ந்துள்ளார். சித்து காங்கிரசில் சேரும் நிகழ்ச்சியின் போது, நவ்ஜோத் கவுர், பர்கத் சிங் ஆகியோர் உடன் வந்தனர். பர்கத் சிங் முன்னாள் அகாலி தள எம்.எல்.ஏ. அவர் சித்துவுடன் சேர்ந்து அவாஸ் -இ- பஞ்சாப் என்ற அமைப்பை உருவாக்கினார். பஞ்சாப் மாநிலத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 4ம் தேதியன்று சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்