முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் அருகே தடையை மீறி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,  -திண்டுக்கல் அருகே தடையை மீறி இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்தியஅரசையும், பீட்டா அமைப்பையும் கண்டித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கா விட்டால் தடையை மீறி நடத்துவோம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பழனி அருகே ஜல்லிக்கட்டு விழா நடத்தப்பட்டது. திண்டுக்கல்லில் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நேற்று திண்டுக்கல் அருகிலுள்ள நல்லாம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு அதனை இளைஞர்கள் போட்டி போட்டு பிடித்தனர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து காளைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் விழா நடத்தக்கூடாது என்று அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தனர். இருப்பினும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியதில் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் வேறு பல கிராமங்களிலும் ஜல்லிகட்டு நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்