முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடக்கம்: எம்.ஜி.ஆர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி  நாளை 17 ம் தேதி அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா மாலையணிவித்து மரியாதை செலுத்துகிறார்.  இது குறித்து அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

சிறப்பு மலர் வெளியீடு

அ.தி.மு.க நிறுவனத்தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா தலைமைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு  நாளை 17 ம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, எம்.ஜி.ஆரின் 100-ஆவது  பிறந்தநாள் விழா சிறப்பு மலரை வெளியிடுகிறார். அதனைத் தொடர்ந்து, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம் வீதம், மொத்தம் 1 கோடியே 4 லட்சம் ரூபாய், குடும்ப நல நிதியுதவியாக வழங்குகிறார்.

கழகத்தினர் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்